மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் கல்வியியல் சிந்தனைகள் (Educational Issues in Malaysian Tamil Movies)

Authors

  • Professor Dr. M. Rajantheran
  • Senior Lecturer Dr. Silllalee S. Kandasamy
  • Senior Lecturer Dr. Ravindaran Maraya

Keywords:

மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள், சமூகவியல், கல்வி, பள்ளி இடைநிற்றல், Malaysian Tamil Movies, Education, Sociology, Education School Dropouts

Abstract

ஆய்வுச் சுருக்கம்

திரைப்படம் என்பது ஒரு கூட்டுக்கலையாகும். தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள், துணைநடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள் எனப் பல்வேறுத் தரப்பினரின் கூட்டு முயற்சியினால் உருவாகுவதேத் திரைப்படமாகும். தொடக்கத்தில் திரைப்படங்கள் மனமகிழ்ச் சாதனங்களாகவேப் பார்க்கப்பட்டன. கல்வியியல் நிலையில் கல்வியாளர்கள் மத்தியில் திரைப்பட ஊடகம் பெரியதொருச் கல்விச் அல்லது ஆதாரச் சான்றாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் இன்று திரைப்படத்துறையானது உலகில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளது. இன்றைய காலத்தில் திரைப்படங்களானது வெறுமென மனமகிழ்ச் சாதனமாக மட்டும் அல்லாமல், பார்வையாளர்களின் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஆற்றலைப் பெற்றிறுப்பதனால், இவை மனிதனின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவேப் பார்க்கப்படுகின்றது. மக்கள் திரைப்படத்தைப் பார்க்கும் போது அதனைத் திரைக்காட்சிகளாகப் பார்க்காமல் அதில் தன்னையும் தனது வாழ்க்கையையும் பொருத்திப் பார்ப்பதுவே இதற்குக் காரணம். திரைப்படத்தின் கதைக் கருவானது பொதுவில் சமூகவியலைத் தொட்டு வருவதுவே பார்வையாளரை இவ்வாறு நினைக்க வைக்கத் தூண்டுகிறது. இதில் கல்வி குறித்த சிந்தனைகள் இடம்பெறாமல் இல்லை. மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் சமூகவியல் கூறுகள் என்று பார்க்கும் போது அதில் கல்வி முக்கியமானதோர் இடத்தைப் பெற்றிருக்கும். இதன் அடிப்படையில் மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் கல்வி குறித்த சிந்தனைகள் எவ்வாறு மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்பட்டுள்ளன என்பதுவே இந்த ஆய்வுக் கட்டுரையின் கருப்பொருள் ஆகும்.

 

Abstract

 

A movie is a collaborative effort among the producer, director, actors, supporting actors, music directors, lyricists, cinematographers, and many parties. Initially, movies were viewed as a source of entertainment sans any fundamental values, especially in education. However, nowadays, movies have penetrated every stratum of the world population and significantly impacted people. Besides entertainment, movies also project the audience’s feelings, thoughts and lifestyles that can initiate many changes in many sectors; such importance deems movies as an essential component of human life. When audiences watch the movies, they identify their lives with the stories portrayed in the movies, which are generally produced to resemble people sociologically; this elevates the value of movies from being a source of entertainment to something more vital. Besides social issues, education-related issues are frequently raised in movies too, and Malaysian Tamil movies are not an exception. Thus, this paper aims to investigate the portrayal of education-related matters in Malaysian Tamil movies.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2023-03-16

Issue

Section

Articles