சுயஇனவரைவியல் பார்வையில் இலங்கைத் தமிழ் நாடகம் ‘உயிர்த்த மனிதர் கூத்து’ (An Auto-Ethnographic account of Sri Lankan Tamil Drama 'UyirthamanitharKoothu')

Authors

  • Mr. Thevanayagam Thevananth

Keywords:

காவிய அரங்கு, நியம அரங்கு, இலங்கைத் தமிழ் அரங்கு, யாழ்ப்பாண அரங்கு, யுத்த கால அரங்கு, Epic theatre, Formalistic theatre, Sri Lankan Tamil theatre, Jaffna theatre, War theatre

Abstract

ஆய்வுச் சுருக்கம்

வட இலங்கை யாழ்ப்பாணத்தில் 1991ம் ஆண்டு நாடக அரங்கக்கல்லூரி உயிர்த்த மனிதர் கூத்து நாடகத்தை தயாரித்து 21 இடங்களில் மேடையேற்றியிருந்தது. உயிர்த்த மனிதர் கூத்து நாடகம் ப்ரெக்ட்டின் காவிய அரங்க முறைமையை கொண்டு தயாரிக்கப்பட்டது. இயக்கர், நாகர் என்ற இரு இனக் குழுமங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத்தீவின் முரண்நிலையை வெளிப்படுத்திய நாடகம். இந்த நாடகம் முழுமையும் கவிதையும் நடனப் பாங்கான அசைவியக்கமும் பரவியிருந்தது. காட்சிப் படிமங்கள் பண்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இதில் நாடக அசைவியக்கம் பார்வையாளர்களை மிக நீண்ட வருடங்களுக்கு பின்னோக்கி கொண்டு சென்று வைத்துவிடும். இருந்தாலும் யதார்த்த சம்பவங்களை நினைவுபடுத்தும். ப்ரெக்ட்டின் காவிய அரங்க கோட்பாட்டையும், அந்நியமாதல் உத்தியையும் உள்வாங்கி  ‘உயிர்த்த மனிதர் கூத்து’ நாடகம் தயாரானது. இந்த நாடகத்தில் பங்குபற்றிய அடிப்படையில் நாடகம் பேசிய விடயத்தோடு நேரடியாகத் தொடர்பு பட்ட வகையில் ஆய்வாளர் சுயஇனவரைவியல் (Auto-ethnography) பார்வையில் உயிர்த்த மனிதர் கூத்து நாடகத்தில் காவிய அரங்க முறைமையில் யுத்த அவலங்கள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விடயம் ஆராயப்படுகின்றது.

 

Abstract

In the year 1991, School of Drama & Theatre in Northern, Sri Lanka, produced the play "Uyirthamanitharkooththu" and performed it in 21 places. The play was produced using the epic theatre concept. This play was spoke about conflicts of two ethnic groups of Nagas and Eyakkar which explores the conflict in Sri Lanka. The play was full of poetry and the rhythmic movements. Play was created by improvisation. Visual images are created based on culture. The director had only a story when he met the actors to produce the play. Even in that story there were no definite scenes and characters. But because every scene was invented by improvisation. This play's dramatic actions can carry the audience for long years back, Although reminiscent of real events. Adopting Brecht's theory of epic theatre and the technic of alienation, the play 'Uyirthamanitharkooththu' was prepared. As the researcher as an actor and participant of this play analysis with autoethnography method, and concept of epic theatre. This paper further analysis how the war tragedies were documented and communicated to the spectators and was its communication successful in terms of epic theatre theory? finally ‘Uyirthemanitharkooththu’ drama documented war tragedies with the formalistic theatre communication.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2023-03-16

Issue

Section

Articles