தொல்காப்பியக் காஞ்சித் திணையும் மகட்பாற் காஞ்சியும் (Kaanchi Thinai of Tholkaappiyam and Makatpaar Kaanchi)
Keywords:
புறப்பொருள் இலக்கணம், காஞ்சித் திணை, நிலையாமை, போர், திருமணம், Purapporul Grammar, Kaanchi Thinai, Impermanence, War, MarriageAbstract
ஆய்வுச் சுருக்கம்
தொல்காப்பியப் புறத்திணை இலக்கணம் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இக்கட்டுரையும் அதன் தொடர்ச்சியே. புறத்திணை இலக்கண ஆய்வுப் பரப்பில் காஞ்சித் திணை முதன்மையானது. காதல் தவிர்த்து வாழ்வியல் நெறிகளை வகுத்தளிப்பது புறத்திணை. புறத்திணையான காஞ்சித் திணைச் சுட்டுவது நிலையாமையை. காஞ்சித் திணையின் துறைகள் எத்தகைய பொருளை விளக்குகின்றன என்பது ஆய்வுக்குரியது. மகட்பாற் காஞ்சியானது காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று. நிலையாமையை அடிப்படையாகக் கொண்டு மகட்பாற் காஞ்சித் துறையை அணுகுவது இக்கட்டுரையின் நோக்கம். தொல்காப்பியம், அதில் இடம்பெறும் காஞ்சித் திணை மற்றும் காஞ்சித் திணையின் துறையான மகட்பாற் காஞ்சி ஆகியன இந்த ஆய்வுக்கு எல்லைகளாக அமைகின்றன. புறத்திணை இலக்கண ஆய்வுப் பரப்பில் மகட்பாற் காஞ்சியின் பொருண்மையை இவ்வாய்வு விளக்க முற்படுகிறது.
Abstract
Tamil grammar has always had a separate place in linguistic studies. Tholkaappiyam is the starting point of such Tamil grammar. Porulathikaaram of Tholkaappiyam is a main tool to access Tamil literature. It also briefly defines Agam and Puram. Tholkaappiyam is a testament to Tamil knowledge tradition, and many studies still need to be done on it. Research on the Puraththinai grammar of Tholkaappiyam continues to emerge. Furthermore, this article is based on its continuity. Puraththinai is the integrity of the various elements of life except for love. Kaanchi Thinai is considered the main factor in Puraththinai’s grammatical study. This article explains Kaanchi Thinai states nature of impermanence. From the time of Gautama Buddha, the impermanence in nature remains in the Indian philosophical tradition and has been carried over until Saiva in the Dravidian practice. The content of Thurais in Kaanchi Thinai is examined in this study. Makatpaar Kaanchi is one of the Thurais in Kaanchi Thinai, which is the focus of this article. Its purpose is to approach the Makatpaar Kaanchi Thurai based on impermanence. Tholkaappiyam, Kaanchi Thinai found in Tholkaappiyam, and Makatpaar Kaanchi, one of the Thurais in Kaanchi Thinai, set the boundary for this study. This study explains the content of Makatpaar Kaanchi in Puraththinai’s grammatical analysis.