‘ஆறிலிருந்து அறுபது வரை’ தமிழ்த் திரைப்படம் மற்றும் மலேசியத் தமிழ் சிறுகதைகளில் வெளிப்படும் தமிழர்களின் சமூகவியல் வாழ்வாதாரம்

(A Review of Tamils’ Sociological Livelihood Portrayed in the Tamil Film ‘Aaril Irunthu Arupathuvarai' and Malaysian Tamil Short Stories)

Authors

  • Senior Lecturer Dr. Ravindaran Maraya
  • Senior Lecturer Dr. Silllalee S. Kandasamy
  • Ms. Ashwini Kannappan

Keywords:

தமிழ்த்திரைப்படம், சிறுகதைகள், சமூகவியல் வாழ்வாதாரம், மலேசியத் தமிழ் இலக்கியம், சமுதாயச் சிந்தனைகள், Tamil film, Short stories, Sociological livelihood, Malaysian Tamil Literature, Social thinking

Abstract

ஆய்வுச் சுருக்கம்

இவ்வாய்வுக் கட்டுரையானது ‘ஆறிலிருந்து அறுபது வரை’ எனும் தமிழ்த்திரைப்படத்தை மையமாகக் கொண்டுள்ளது. 'ஆறிலிருந்து அறுபது வரை’ தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்படும் தமிழர்களின் சமூகவியல் வாழ்வாதாரத்தைக் கண்டறிவதுடன் அக்கருத்துக்கள் மலேசியத் தமிழ் இலக்கியமான சிறுகதையில்  எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகத் திகழ்கிறது. மேலும், பண்புசார் ஆய்வின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாய்வில் குடிப்பழக்கம், கல்விக்கு முக்கியத்துவம் வழங்க முடியாமை, வறுமையில் வாடும் சமூகம், அன்பைப் போற்றாத குடும்ப உறவுகள், மேல் வர்க்கத்தினரின் ஆதிக்கம், பொருளாதாரச் சிக்கல் (கடன்) ஆகிய ஆறு சமூகவியல் வாழ்வாதார கருத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் மலேசியத் தமிழ் இலக்கியமான சிறுகதையில் இச்சமூகவியல் கருத்துக்கள் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதையும் அதன் வாயிலாகச் சமுதாயச் சிந்தனைகளையும் காண இயல்கிறது.

 

Abstract

This research article aims to identify the sociological livelihood that emerged in the Tamil film ‘Aarilirunthu Arubathu Varai’ and to discover how these ideas are displayed in Malaysian Tamil literature (Short Stories). This qualitative study identifies six prime sociological ideas, such as alcoholism, lack of emphasis on education, poverty-stricken society, lack of love towards family, the dominance of the upper class, and financial problems (debt), and how these sociological are displayed in Malaysian Tamil literature.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2023-03-16

Issue

Section

Articles