கீர்த்தனை - இயல், இசை அமைதி (Keerthanai - Literary and Musical Structure)
Keywords:
கீர்த்தனை, இசைவடிவங்கள், கீர்த்தனைப்பகுதிகள், இயலமைதி, இசையமைதிAbstract
ஆய்வுச்சுருக்கம்
இசையுலகிலே காலந்தோறும் இசைக்கலையின் போக்கிற்கிணங்க பாடல் வடிவங்கள் பல தோற்றம்பெற்று இசைக்கலைக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இப்பாடல் வடிவங்கள் காலந்தோறும் சமூகப்பண்பாட்டுச் செல்நெறியிலே இசைக்கலை பெறுகின்ற இடத்திற்கமைவாகவும் வாக்கேயகாரர்களின் புலம் சார்ந்தும் வடிவங்களிலே மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தப்பின்புலத்திலே தமிழிசை மரபிலும் இத்தகைய போக்குகள் இருந்திருக்கின்றன. சங்க காலப்பாடல்களிலிருந்து பின்னர் வெண்பாக்கள், கலித்துறை எனத் தமிழ்ப்பா வடிவங்களும் தொடந்து பதிகங்கள், விருத்தங்கள் எனவும் நாமசங்கீர்த்தனங்கள், தூது, ஊஞ்சல், உலா, அந்தாதி எனப்பலவுமாக வளர்ந்து, கீர்த்தனைகள், வர்ணங்கள், பதங்கள் என சாஸ்த்திரியப் பொதுமைக்குள் தன்னுடைய வடிவங்களை இணைத்துக்கொண்டது இசைக்கலை. இந்தநிலையிலே கீர்த்தனைகள், அதன் தோற்றகாலம் தொடக்கம் இன்று வரை இசையுலகிலே தவிர்க்கமுடியாதவாறு முதலிடம் பெறுகின்றது. ஏனைய இசைவடிவங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது கீர்த்தனைகள் பெறுகின்ற இடம் சமூகத்திலும் சரி, ஆற்றுகைவடிவங்களிலும் சரி முக்கிய இடம்பெறுகின்றது. இதற்கான காரணம், இதன் வடிவம், வளர்ச்சி என்பன பற்றிப் பேசுவதாக இவ்வாய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது.