பண்டைய இலக்கியங்களில் காணப்பட்ட போர் மரபுகளில் காட்டப்படும் அறச்சிந்தனை (Philanthropy during War Found in Old Tamil Literatures)
Keywords:
வரையறை, போர், அறச்சிந்தனை, மரபுகள், நெறிமுறைகள், வீரச்செயல்கள்Abstract
ஆய்வுச்சுருக்கம்
சங்க கால இலக்கியங்களில் மிகவும் பழமையான நூலாகத் திகழ்வது தொல்காப்பியமாகும். மனிதனின் வாழ்கை முறையையும் அவற்றில் கடைபிடிக்கவேண்டிய அறநெறிகளையும் சரிவர பகுத்து கூறிய நூல் தொல்காப்பியமே. அகவாழ்க்கை, புறவாழ்க்கை இவை இரண்டுமே அறநெறி கோட்பாடுகளுக்குள் அடங்கும் என்பது தொல்காப்பியம் உணர்த்தும் கருத்து. புறத்திணை என்று பார்த்தோமானால், அக்காலத்தில் நிகழ்ந்தப் பலப் போர்ச்சம்பவங்களைப் பற்றி எடுத்துரைக்கிறது. சங்ககால மக்கள் நடத்தியப் போர்களும் அவர்களது வீரச்செயல்களைப் புறநானூறு கூறுகின்றது. அவ்வகையில் போர்களில் கூட நம் மக்கள் அறச்சிந்தனைக் கடைபிடித்துள்ளனர் என்பதுச் சிறப்பிற்குரியது. பண்டையக் காலத்தில் போர்கள் சில வரையறைகளோடு நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதுத் தொல்காப்பியம் கூறும் ஆவணமாகும். ஏனெனில், எல்லையை விரிவுபடுத்துதல், வலிமைக் கருதுதல், பெரியவன் எனும் போக்குச், செல்வப் பெருக்கம், ஓர் குடும்பத்திற்குள்ளான முரண் எனச் சில காரணிகள் அடிப்படையிலான போர்கள் அக்காலத்தில் நிகழ்ந்தன. ஆனாலும் கூட, சங்கப்போரியல் செய்திகளில், போர் முறைத் தவறியதாகக் கூறும் செய்திகளும், சான்றுகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பண்டையப் போர் முறையில் நம்மவர்கள் கடைபிடித்த அறச்சிந்தனை, போர் மரபுகள், போர் நெறிமுறைகள், போரில் நிகழக்கூடிய சம்பவங்கள் என எடுத்துக் கூறுவதாய் இக்கட்டுரை அமைந்துள்ளது.