கவிஞர் முத்துப்பாண்டியனின் ‘திருந்தினாரில்லை’ புதுக்கவிதையில் காட்டப்படும் சமூகவியல் கருத்துகள்: ஓர் ஆய்வு (Sociological Ideas Displayed in the Poem ‘Thirunthinarillai’ by Poet Muthupandian: A Study)
Keywords:
முத்துப்பாண்டியன் , சமூகவியல் கருத்துக்கள் , சமூக பிரச்சனைகள், சமூக சிந்தனை , புதுக்கவிதை.Abstract
ஆய்வுச் சுருக்கம்
இவ்வாய்வுக் கட்டுரையானது கவிஞர் முத்துப்பாண்டியனின் ‘பாண்டி முத்துகள்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘திருந்தினாரில்லை’ என்ற புதுக்கவிதையை மைமாகக் கொண்டுள்ளது. ‘திருந்தினாரில்லை’ என்ற புதுக்கவிதையில் காட்டப்படும் சமூகவியல் கருத்துகளைச் சமுதாயச் சிக்கல் மற்றும் சமுதாயச் சிந்தனைகள் என்ற கூறுகள் அடிப்படையில் சமக்கால சமுதாயத்தில் ஆராய்வது இவ்வாய்வின் முதன்மை நோக்கமாக விளங்குகிறது. 'திருந்தினரில்லை' என்ற புதுக்கவிதையில் கற்றவர்களிடையே பண்பும் பக்குவமற்ற நிலைப்பாடு, முயற்சியற்று விளங்கும் சமுதாயம், சமூகத்தின்மீது பற்றுதலற்று இருத்தல், தமிழைப் போற்றா நிலை, பகுத்தாராயும் தன்மையற்று விளங்குதல், சமூகத்தில் ஒற்றுமையற்ற நிலைப்பாடு, சாதிய ஏற்றத்தாழ்வு ஆகியச் ஏழு முதன்மை சமூகவியல் கருத்துகளை ஆய்வின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.