தேவதாசிகள்– ஓர் ஆய்வுப்பார்வை (A Research View on Devadasis)
Keywords:
தேவதாசிகள், தமிழ்நாடு, பரதநாட்டியம், பண்பாடு. கலைகள்Abstract
ஆய்வுச் சுருக்கம்
இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பழங்காலத்து வழக்கிலிருந்த தேவரடியார்கள் எனப்படும் தேவதாசிகள் பற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஆனால் இவ்வழக்கு தமிழ்ச்சமுதாயத்தில் எவ்வாறு ஏற்பட்டது; சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்ட தேவரடியார்கள் நாளடைவில் எவ்வாறு சமுதாய அவலங்களில் சிக்குண்டு மதிப்பிழந்தனர்; அவர்களது வாழ்வியல், சமூகநிலை, கலை, பண்பாடு, தேவதாசிகள் ஆற்றியுள்ள சமூகத்தொண்டு, அவர்களது இலக்கியப்பணி ஆகியன குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். தேவரடியார்களால் வளர்க்கப்பட்ட இசைக்கலையும் நாட்டியக்கலையும் இன்றளவும் உலகளவில் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. ஆனால் இக்கலைகளைக் கண்போல் காத்தளித்த தேவரடியார்களைப் பற்றியச்செய்திகள் அரிதாகவே மக்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருப்பது வேதனைக்குரியதாகும். அவ்வகையில், தேவரடியார்களைப் பற்றிய ஆய்வுகளும் தேடல்களும் அதிகரிக்கப்பட வேண்டியதன் இன்றியமையாமையை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.