தமிழ் படத்தில் ஆண் பார்வையும் கதாநாயகிகளின் பின்னணிக் குரலும் (Male Gazes and Heroines’ Dubbed Voices in Tamil Movies)
Keywords:
பாலின சமத்துவமின்மை, ஒலியின் பயன்பாடு, தமிழ் திரைப்படம், குரல், ஆண் பார்வைAbstract
ஆய்வுச் சுருக்கம்
இக்கட்டுரை கதாநாயகிகளின் பின்னணிக் குரல் பயன்பாட்டை ஆராய்கிறது. தமிழ் திரையுலகில் இந்த வழக்கம் சுமார் 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. பின்னணிக் குரல் தமிழ் பேசத் தெரியாத கதாநாயகிகளுக்கு மட்டும் பயன்படுத்தப் படுவதில்லை, பல சமயங்களில் தமிழ் சரளமாக பேசத் தெரிந்தவர்கள் கூட பின்னணிக் குரலை பயன்படுத்துகிறார்கள். கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் பெரும்பாலும் தங்களின் சொந்த குரலையே பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் தனித்துவத்தை உறுதிப் படுத்துகிறது. ஆண் பார்வைக்காக உருவாக்கப் பட்ட பெண் கதாப்பாத்திரங்களில், ஒரு பெண்ணின் தோற்றமும், கவர்ச்சியும் முக்கியமாக கருதப்படுகிறது. அதனால் அவர்களின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.