ந. மகேஸ்வரியின் ‘மனைத்தக்க மாண்புடையாள் ஆகி’ சிறுகதையில் பெண்ணியப் பார்வை (Feminism in Na. Mageswary’s Short Story entitled Manaithakka Maanpudaiyaal Aagi)
Keywords:
பெண் எழுத்தாளர், பெண் இயல்பு, பெண்ணியம், எழுத்தாளர் ந. மகேஸ்வரி, மலேசிய சிறுகதைகள்Abstract
ஆய்வுச் சுருக்கம்
பெண்ணியப் பார்வை என்பது தமிழ் இலக்கிய சூழலுக்கு வந்ததொரு புதியப் பார்வையாகும். ஆண் என்பதால் அதிகாரமும் பெண் என்பதால் அவள் பகடைக்காயாகவும் உருட்டப்படுகிறாள். எழுத்தாளர் ந. மகேஸ்வரியின் கதைகள் பெண்களின் வாழ்க்கையை விமர்சிக்கும் கதைகள் என்பதை மறுக்கவியலாது. மகேஸ்வரி ஒரு பெண்ணிய சிந்தனையாளர். மனித உயிரினத்தில் சரிபாதியாகக் காணப்படும் ஆணும் பெண்ணும் சமநிலையில் உரிமை பெற்றிருக்கவில்லை. ஆண், பெண் பாகுபாட்டில் பெண்களே பெருமளவில் உரிமைகளை இழந்து துன்புறுகின்றனர். பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை மறுக்கப்படுகின்றன. ஆண்வர்க்கத்தின் அடக்குமுறை, பெண்களை சுரண்டும் போக்கு, பெண்களை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் சூழல் போன்றவை தொடர்ந்து கொண்டே வருகின்றது. ஆகவே, ஆணாதிக்கச் சூழலில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்ற கோரிக்கையினை ‘மனைத்தக்க மாண்புடையாள் ஆகி’ சிறுகதையில் ஆசிரியர் பெண்களுக்கு எடுத்துணர்த்துகின்றார்.