மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் பங்கு : ஓர் ஆய்வு (The Role of Indian Non-Governmental Organisations in the Development of Malaysian Tamil Schools)
Keywords:
மலேசியக் கல்வி, மலேசியத் தமிழ்ப் பள்ளிகள், தமிழ்ப் பள்ளி மாணவர்கள், அரசு சாரா அமைப்புகள்.Abstract
ஆய்வுச் சுருக்கம்
நமது நாட்டில் மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் கல்வியே அதிகளவில் பங்காற்றுகிறது. மலேசிய அரசாங்கத்தின் கல்வித் திட்டமானது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதுவானது, நமது நாட்டிலுள்ள பல்வேறு கலை கலாச்சாரங்களை ஒருங்கிணைத்துள்ளது. மலேசியாவில் இயங்கும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் இது பொருந்தும். மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் எனப்படுவது அரசாங்க உதவிகள் பெறும் தொடக்கப்பள்ளிகளாகச் செயல்படுகின்றது. தமிழ்ப்பள்ளிகள், தாய் மொழியான தமிழ் மொழியைப் போதிக்கும் ஊடகமாகச் செயல்படுகின்றது. மலேசிய இந்திய மாணவர்கள் அதிகளவில் இங்கு பயில்கின்றனர். தமிழ்ப் பள்ளிகள் தமிழ் மொழியில் கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாது, பல இனங்கள் வாழும் நமது மலேசிய நாட்டில் ஒற்றுமையை வளர்த்து, ஒரு தனித்துவமான அடையாளத்தை பேணவும் மலேசிய இந்தியர்களுக்கு நமது கலை கலச்சாரத்தையும் போதிக்கின்றன. தற்போது மலேசியாவில் சுமார் 527 தமிழ்ப் பள்ளிகள் செயல்படுகின்ற வேளையில், 2021-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் வழி மொத்தம் 80,434 இந்திய மாணவர்கள் தமிழ்ப் பள்ளியில் பயில்வதாக அறியப்படுகிறது. அரசாங்கத்தின் உதவிகள் கிடைத்தாலும், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு சாரா நிறுவனங்களின் உதவிகள் இன்னும் பெரிதளவில் தேவைப்படுகிறது. ஆகவே, மலேசியாவில் இயங்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் உதவுகின்றன.