சிங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தமிழ் ஆசிரியர்களின் பங்களிப்பு-ஓர் அறிமுகம் (பகுதி 1) The Significant Roles of Tamil Teachers in the Development of Singaporean Tamil Literature – An Introduction (Part 1)
Keywords:
ஆசிரியப்பணி, சமூகப் பொறுப்பு, கற்பித்தல், வழிகாட்டி, படைப்பாளி, விடுதலைக்குப் பின் சிங்கப்பூர், இலக்கியப்பணி.Abstract
கட்டுரைச் சுறுக்கம்
ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் வழிகாட்டிகள் மட்டுமல்லர். அவர்களின் பணி கூலிக்கு மாரடிப்பது போன்ற பணியன்று. அர்ப்பணிப்புடன் ஆற்றவேண்டிய பொறுப்பு.புத்தகங்களில் உள்ளவற்றை மட்டும் கற்பிக்கும் வெறும்பணி செய்பவர்களாக ஆசிரியர்கள் இருந்தால் எந்த நாடும் வளம்பெற இயலாது. ஆனால் அவர்கள் சமூகப்பொறுப்பு உடையவர்கள் என்னும் சிந்தனையுடன் நல்லொழுக்கம், உயர்ந்த சிந்தனைகள் ஆகியவற்றோடு மொழி, கலை, இலக்கியம் ,பண்பாடு,வரலாறு போன்றவைகுறித்த பல அரிய செய்திகளை மாணவர்கள் அறியத்தருபவர்களாகப் பணிபுரியும்போது நாடும் மாணவர்களும் பலன்பெறுவதோடு வளமும் பெறுவர். ஆகவேதான் கன்பூஷியஸ் புதியதை நம்புபவரும் பழையனவற்றை நேசிப்பவரும் ஆசிரியராக முடியும் என்று கூறினார். ஆசிரியர்களாக இலக்கியங்களைக் கற்பிப்பதோடு மட்டுமல்லாமல் படைப்பாளியாகவும் விளங்கி ஒவ்வொரு மொழியிலும் இலக்கிய வளர்ச்சிக்கு உலகமெங்கும் ஆசிரியர்கள் பங்களித்து வந்துள்ளனர். குறிப்பாக விடுதலைக்குப்பின்னர்ச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தமிழ் ஆசிரியர்கள் மிகப்பலர் ஆற்றியுள்ள பங்களிப்பை அறிமுகநோக்கில் இக்கட்டுரை இரு பாகங்களாக விவரிக்கிறது. முதல்பாகம் ஆண் ஆசிரியர்கள் பற்றியது. இரண்டாம் பாகம் பெண் ஆசிரியர்கள் பற்றியது.