‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ கவிதைத் தொகுப்பில் காணப்படும் பின்நவீனத்துவக் கோட்பாடு Postmodernism Theory in ‘Sarvam Brahmasmi’ Poetry Collection
Keywords:
பின்நவீனத்துவம், முதலாளித்துவம், தனிமனிதவாதம், பகுத்தறிவுவாதம், சர்வம் பிரம்மாஸ்மிAbstract
ஆய்வுச் சுருக்கம்
இந்த ஆய்வு, ம. நவீன் இயற்றிய ‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ கவிதைத் தொகுப்பில் காணப்படும் பின்நவீனத்துவக் கோட்பாட்டின் உட்கூறுகளான முதலாளித்துவம், தனிமனிதவாதம், பகுத்தறிவுவாதம் போன்ற கருத்துகளை விமர்சனம் செய்வதாகும். மேற்கண்ட இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையின் வழி ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கான தரவுகள் யாவும் நூலக ஆய்வின் வழி பெறப்பட்டதாகும். பின்நவீனத்துவ உட்கூறுகளான முதலாளித்துவம், தனிமனிதவாதம், பகுத்தறிவுவாதக் கருத்துகள் எவ்வாறு இந்தச் ‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ கவிதைத் தொகுப்பில் கையாளப்பட்டுள்ளது என்ற இந்த ஆய்வில் முதலாளித்துவம், பகுத்தறிவுவாதக் கருத்துகளைக் காட்டிலும் தனிமனிதவாதக் கருத்தானது பல கருக்களில் இத்தொகுப்பில் கவிதைகளாக இடம்பெற்றுள்ளன. இந்த ஆய்வை மேற்கொள்வதன் மூலம், பின் நவீனத்துவம் சார்ந்த தவறான கண்ணோட்டத்தை வாசகரிடையே களைவதுடன் தமிழ் இலக்கியத்தில் சிறந்த பின்நவீனத்துவக் கருத்துகளைக் கொண்ட படைப்புகளைப் படைக்க எழுத்தாளரிடையே வித்திடுவதாகும்.