மூன்றாம் ஆண்டு மாணவர்களின் லகர ழகர ளகர சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தலை மேம்படுத்த QR குறியீட்டு தகவல் தொழில்நுட்ப வழி வாசிப்புச் சிப்பம் Construction and Evaluation of Reading Module Based on QR Barcode Technology in Improving SJK(T) Year 3 Stude
Keywords:
வடிவமைப்பும் மேம்பாட்டும், தேவைகள், மதிப்பீடு, வாசிப்புச் சிப்பம், தரவுAbstract
ஆய்வுச் சுருக்கம்
தொடக்கப் பள்ளி மூன்றாம் ஆண்டு மாணவர்களிடையே வாசிப்பு திறனில் சரியான லகர ழகர ளகர உச்சரிப்பை மேம்படுத்த QR குறியீடு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வாசிப்பு சிப்பத்தை உருவாக்குவதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்ள ரிட்சே மற்றும் கிலென் (2007) அறிமுகப்படுத்திய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு (Design Development Research) ஆராய்ச்சி அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வு மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் தேவைகள் அடிப்படையில் (Need Analyse) எட்டு தமிழ் மொழி ஆசிரியர்களுடன் நேர்காணல் மூலம் ஆசிரியர்களின் தேவைகளைப் பகுப்பாய்வு செய்யப்பட்டு தரவுகள் கிடைக்கப்பெற்றன. பிறகு, 84 மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கேள்விகள் உள்ளடக்கிய கேள்வித்தாள்களைப் பயன்படுத்தி மாணவர்களின் தேவைகளின் பகுப்பாய்வு மதிப்பிடப்பட்டது. புள்ளிவிவர தொகுப்பு (SPSS)ஐ பயன்படுத்தி விளக்க புள்ளி விவரங்கள் மூலம் பெறப்பட்ட தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. தேவைகள் பகுப்பாய்வின் விளக்கம் சராசரி மதிப்பு மற்றும் நிலையான விலகலை (standard deviation) அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது கட்டமானது வடிவமைப்பு மற்றும் மேம்பாடு கட்டத்தில் (Product Development And Design) வாசிப்புச் சிப்பத்தை உருவாக்க ஃப்சி டெல்பி (Fuzzy Delphi) முறை பயன்படுத்தப்பட்டது. மூன்றாம் கட்டத்தில், மதிப்பீடு (Evaluation) தொழில்நுட்பக் குழு அணுகுமுறையைப் பயன்படுத்தி 10 பேர் கொண்ட ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் குழுவினரால் வாசிப்புச் சிப்பத்தின் பயன்பாட்டினை மதிப்பீடு செய்யப்பட்டது. மாணவர்களின் லகர, ழகர, ளகர உச்சரிப்பு வாசித்தலின் முன்னறிவு மட்டத்தின் சராசரி மதிப்பு 4.06 (SP: 0.5), மாணவர்களின் லகர, ழகர, ளகர உச்சரிப்பு வாசித்தலின் அணுகுமுறை நிலை 4.37 (SP: 0.492) மற்றும் மாணவர்களின் லகர, ழகர, ளகர உச்சரிப்பு வாசித்தலின் தயார்நிலை நிலை 4.41 (SP: 0.45). இரண்டாம் கட்டத்தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில், வாசிப்புச் சிப்பத்தின் குறிக்கோள்கள், உள்ளடக்கம், பயிற்றுத் துணைப்பொருள் கருவிகள், கற்பித்தல் உத்திகள் அடங்கியுள்ளன. மேலும், வாசிப்புச் சிப்பத்தை உருவாக்குவதற்கான மதிப்பீடு ஆகியவற்றைக் கொண்ட முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. மூன்றாம் கட்டத்தின் அனைத்து முக்கிய கூறுகளும் 84%க்கும் அதிகமான சதவீத மதிப்பை அடைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழுவில் உள்ள 40 மாணவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு குழுவில் உள்ள 40 மாணவர்கள் மீது வாசிப்புச் சிப்பம் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வாசிப்புச் சிப்பத்தைப் பயன்படுத்திய பின் மாணவர்களின் சோதனைக்குப் பிந்தைய மதிப்பெண்கள், சோதனைக்கு முந்தைய மதிப்பெண்களை விட அதிகமாக இருந்தன என்று ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. ஆகவே, இந்த ஆய்வின் வழி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சரியான லகர, ழகர, ளகர உச்சரிப்புடன் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதில் QR குறியீடு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வாசிப்புச் சிப்பம் வழிகாட்டியாக உள்ளது.