தமிழ்ப்பண்பாடு காக்கும் நாட்டார் இசைமரபு: ஓர் பண்பாட்டு இசையியலாய்வு. Folk Music Tradition that Protects Tamil Culture: A Cultural Musicology
Keywords:
Folk Songs, Cultural Identity, Indvidulaity, Cultural transmission, Tradition, Cultural norms.Abstract
ஆய்வுச் சுருக்கம்
ஓவ்வொரு கலாசாரமும் அதன் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டுள்ளது. இந்தப்பண்பாட்டுக் கூறுகள் அந்தக் கலாசாரத்தைப் பின்பற்றும் இனக்குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது பண்பாட்டு ஆய்வாளர்களின் முன்மொழிவுகள். இந்தக் கலாசாரக் கூறுகளே கணிசமான சமூக இருப்புக்கு வழிவகுக்கின்றது. இந்த அர்த்தத்தில் இசை ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு கலாசார அங்கமாக பிரிக்கமுடியாத வகையிலே இணைக்கப்பட்டுள்ளது. பழைமையான கலாசாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஊடகமாக ஒலிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சிந்தனை வளர்ச்சியும் அறிவியலின் வளர்ச்சியும் இந்த ஒலிகளை கலை வடிவங்களாக மாற்றியது. இந்த இசையின் விரிவாக்கம் பிற்பட்ட காலங்களிலே செழிக்கத் தொடங்கியிருந்தாலும் இசை அடிப்படைக் கூறுகளில் அதிக மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. உலகெங்கிலுமுள்ள ஒவ்வொரு கலாசாரத்திலும் இந்த உண்மையினை நாட்டுப்புறக்கலை வடிவங்கள் நிரூபிக்கின்றன. இந்த நாட்டுப்புறக் கலைவடிவங்கள் அவர்கள் வாழும் கலாசாரத்தின் வேர்களாக இன்றும் கருதப்படுகின்றன.