கம்பராமாயணம் கற்பிக்கும் தனிமனித அறநெறி Individual Morality as Prescribed by Kambha Ramayanam
Keywords:
இதிகாசம், கம்பராமாயணம், கதைமாந்தர்கள், தமிழ் இலக்கியம், சமூக வளர்ச்சி, அறநெறி, சமூக உணர்வுகள், தனி மனித ஒழுக்கம்.Abstract
இந்த கட்டுரையானது மனித வாழ்கைக்கு உகந்த மிக சிறந்த கருத்துக்களை பாடங்களாக கற்பித்துள்ளது. மிக முக்கியமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற இராமனது தனிமனித ஒழுக்கம், மற்றும் கற்புநெறிக்கு உகந்த மகளிராக சீதை, இராமன் வாலியிடம் கூறும் ஒழுக்க நெறி, அறத்தின்பால் நின்ற மாரீசன், அறத்தின்பால் நின்ற மாரீசன், கும்பகருணன் நேர்மை குணம் சொல்லும் மாண்பு, போன்றோர்களை இக்காப்பியத்துள் காணலாம். சமுதாயத்தில் கம்பரின் இராமாயணம் அறநெறி தவறாமல் வாழ்வது என்பது உட்பட மிகச் சிறந்த கருத்துகளை மேன்மை உடையதாகவும் கொண்டது என்று சான்றோர்களால், மற்றும் சிந்தனையாளர்கள் கருதப்படுகிறது. உதாரணமாக, தனிமனித ஓழுக்கம் மற்றும் அறநெறி பிறழாமல் வாழுதலும், கற்புநெறி தவறாமல் நடப்பதும் என்பன உள்ளடக்கிய மிக உயர்வான மற்றும் உன்னதமான விஷயங்களை காப்பியமான கம்பராமாயணம் பகிர்கின்றது.