‘கெங்கம்மாவின் புதுமைப் பெண்' என்ற சிறுகதையில் சித்தரிக்கும் தற்கால பாரதி கண்ட புதுமைப் பெண் : ஓர் பார்வை Bharathiyar’s portrayal of a novel woman in contemporary society in the short story of ‘Gengammavin Pudhumai Penn’: A Review
Keywords:
பாரதி, புதுமைப் பெண், சுதந்திரம், சமகாலம், சமூகம், சிறுகதை.Abstract
அய்வுச் சுருக்கம்
இவ்வாய்வு கட்டுரையானது 34-வது பேரவைக் கதைகளின் சிறுகதைகளுல் ஒன்றில் சித்தரிக்கப்படும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணை மையமாகக் கொண்டது. மகாகவி பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணை எவ்வகையில் தற்கால சமுதாயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் ‘கெங்கம்மாவின் புதுமைப் பெண்’ என்ற சிறுகதையில் கண்டறிவது, இவ்வாய்வின் முதன்மை நோக்கமாகும். இச்சிறுகதையின் நாயகியான தமிழழகி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக சித்தரிக்கப்படுகிறாள். இக்காலச் சமுதாயத்தில் பெண் கல்விக்கான முக்கியத்துவம், பாலின சமத்துவம், பெண்கள் உரிமைகளுக்காகப் போராடும் துணிவு, திருமணத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்களின் சுதந்திரம் ஆகியவற்றில் சிறந்த அறிவாற்றல் பெற்றவளாக தமிழழகி மிளிர்கிறாள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் இலக்கணத்துக்கேற்ப பெண்களுக்கான சுதந்திரத்தையும் உரிமையையும் ‘கெங்கம்மாவின் புதுமைப் பெண்’ என்ற சிறுகதையின் நாயகி வாயிலாக சித்தரிக்கப்படுகின்றன.