சித்தர் பாடல்களில் சைவ சித்தாந்தத்தின் சாயல் The influence of Saiva Siddhantam in Siddhar poem
Keywords:
சித்தர் பாடல்கள், சைவ சித்தாந்தம், சித்தர் நெறி, முப்பொருள், மும்மலம்Abstract
சித்தர் பாடல்கள் தனித்துவம் மிக்கவை. அவற்றுள் இந்தியத் தத்துவங்களில் உள்ள பெரும்பான்மையானக் கருத்துகள் பொதிந்துக் கிடக்கின்றன. சித்தர்கள் எல்லை கடந்த நிலையில் எல்லாக் கருத்துகளையும் பேசுவதால் அவர்களை எந்தவொரு சமய அமைப்பின் கீழும் கொண்டு வரவியலாது. பொதுவாக இவர்கள் சமயங் கடந்த மேலான சமரச நிலையில் நிற்பவர்கள். இவர்களது பாடல்களில் சைவ சித்தாந்தக் கருத்துகள் பல இடம்பெற்றுள்ளதைக் காண முடிகின்றது. எனவே, சித்தர் பாடல்களில் காணப்படும் சைவ சித்தாந்த சாயல்களை ஆராய்ந்து முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சமயப் பொதுமை, உள்ள பொருள், மலம், நால்வகைப் பேறு, தாதான்மிய நிலை ஆகிய கூறுகள் மட்டுமே இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன. ஆய்வை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது சித்தர்களுடைய பாடல்களில் சைவசித்தாந்தத்தினுடைய சாயல் பரவலாகப் படிந்திருப்பது புலனாகின்றது. சைவநெறியும் சித்தர்நெறியும் ஒன்றுக்கொன்று பெரிதும் முரணாக இல்லாமல், ஒன்றோடொன்று தொடர்புடையனவாக அமைந்துள்ளன. இறைவன் ஒருவன் உளன்; அவன் எல்லாமாகவும், எங்கும் நிறைந்தவனாகவும், எல்லாம் வல்லவனாகவும் இருக்கின்றான் என்னும் கருத்தில் சைவநெறியும் சித்தர்நெறியும் உடன்படுகின்றன. ஆனால் அவன் அருளாலே அவனாகவே ஆகும் இறைநிலையை எய்துதல் என்னும் கருத்தில் அவை வேறுபடுகின்றன.