கௌதில்யரின் அர்த்த சாத்திரத்தில் வெளிப்படும் தலைமைத்தும் ஓர் ஆழ்நிலை ஆய்வு A Critical Analysis on the Leadership Aspects of Kautilya's Arthashastra
Keywords:
தலைமைத்துவம், கௌத்தில்யர், அர்த்தசாத்திரம், நிர்வாகம், அரசாட்சி.Abstract
ஆய்வுச் சுருக்கம்
இந்திய நாகரீகத்தில் மிகப் பழம்பெரும் நூலாகவும், அரசியல் சூட்சுமங்களை மிகச் சிறந்த சிந்தனைகளாகவும் வெளிப்படுத்தக் கூடியது அர்த்தசாத்திரம். கௌத்தில்யர் எனும் பேரறிஞரால் இயற்றப்பட்ட அர்த்த சாத்திரம் நாட்டின் அரசாட்சி முறை, பொருளாதார நிர்வாகம், மனித வள நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றை வடிவமைத்துக் காத்தல், இராஜதந்திரம், வெளியுறவுக் கொள்கை, போர் முறை, பாதுகாப்பு உத்திகள் போன்ற பல்வேறு விசயங்கள் குறித்த சீரிய சிந்த்னைகளை உள்ளடக்கியது. அர்த்தசாத்திரம் ஒரு தலைவனுக்குள் இருக்க வேண்டிய பண்புகள் யாவற்றையும் வகுத்துக் கூறியுள்ளது. அர்த்தசாத்திரம் குறித்துப் பல ஆராச்சிக் கட்டுரைகள் இன்றுவரை படைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல ஆராய்ச்சியாளர்கள் அர்த்தசாத்திரத்தில் விளக்கப்பட்டுள்ள தலைமைக் கருத்துக்கள் மற்றும் அதன் மாதிரிகளை ஆராய்ந்து, நவீனச் சூழலில் அதன் பயன்பாட்டினை வளப்படுத்தியுள்ளனர். ஆயினும் அர்த்த சாத்திரத்தில் தலைமைத்துவ பண்புகள் குறித்து இன்னமும் புதிய செய்திகள் ஆய்வு செய்யப்பட்டுதான் வருகின்றன. இந்த ஆய்வுக் கட்டுரையில், கௌத்தில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் தலைமைத்துவத்தின் அம்சங்கள் குறித்த ஆராய்ச்சியனது ஆய்வு முன்னோடிகளின் விமர்சனப் பகுப்பாய்வை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.