லெய்டன் செப்பேடுகள்: சோழப்பேரசுக்கும் ஸ்ரீவிஜயப்பேரசுக்குமான தொடர்புகள் மற்றும் நாகப்பட்டின பௌத்த விகாரை Leiden Copper Plates: Chola-Srivijaya Links and the Nagapattinam Buddhist Vihara
Keywords:
ஆனைமங்கலம் செப்பேடுகள், லெய்டன் செப்பேடுகள், சோழர்கள், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், சைலேந்திரா, ஸ்ரீவிஜயப்பேரரசு, சூடாமணிவிகாரை, கடாரம்.Abstract
ஆய்வுச் சுருக்கம்
நெதர்லாது நாட்டில் உள்ள லைடன் பல்கலைக்கழகம் பொ.ஆ. 1575ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனைமங்கலம் செப்பேடுகள் பெரிய லைடன் செப்பேடுகள், சிறிய லைடன் செப்பேடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சோழ மன்னர்களின் பரம்பரை தொடர்பான செய்திகளையும், வெற்றிகளையும், சிறப்புகளையும் விளக்கும் ஆவணங்களாகும். இச்செப்பேடுகள் தற்சமயம் நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சிறப்பு சேகரிப்புகள் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாய்வுக் கட்டுரை இச்சேபேடுகள் எவ்வாறு இந்த நூலகத்தின் பாதுகாப்பிற்குக் கொண்டுவரப்பட்டன என்ற செய்திகளை விவரிக்கின்றன. இச்செப்பேடுகளில் உள்ள எழுத்துப் பொறிப்புகள் பொ.ஆ.11ஆம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜராஜன் வழங்கிய அரச ஆணையை விவரிப்பதாகவும், ஸ்ரீவிஜயப்பேரரசுடன் சோழப் பேரரசு கொண்டிருந்த தொடர்புகளை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றன. ஸ்ரீவிஜயப் பேரரசு இந்தோனேசிய தீவுகளான சுமத்ரா, ஜாவா பகுதியில் உருவாகி இன்றைய மலாயா தீபகற்பத்தில் இன்றைய தெற்கு தாய்லாந்து வரை தன் ஆட்சியைச் செலுத்திய ஒரு பேரரசாகும். ஸ்ரீவிஜயப்பேரரசு பொ.ஆ.7லிருந்து 11ம் நூற்றாண்டு வரை புகழின் உச்சியில் இருந்தது. பொ.ஆ.12ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு தனது கடற்படையை அனுப்பி இப்பேரரசை வீழ்த்தி வெற்றி கொண்டது. லைடன் செப்பேடுகள் ஆனைமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள சில கிராமங்களின் வருவாயை ஸ்ரீவிஜயப் பேரரசு நாகப்பட்டினத்தில் எழுப்பிய சூடாமனி விகாரைக்கும் அதன் பௌத்த பள்ளிக்கும் சோழ மன்னர்கள் நன்கொடையாக வழங்கிய செய்திகளை விவரிக்கின்றது.