தற்கால தமிழ் இலக்கிய வளர்ச்சியின் மலேசிய இளைஞர்களின் பங்களிப்பு: ஒரு பார்வை
Contribution of Malaysian Youths in the Development of Modern Tamil Literature: A Review
Keywords:
மலேசியா, மலேசியத் தமிழ் இளைஞர்கள், தற்கால தமிழ் இலக்கியம், மலேசியத் தமிழ் இலக்கியம், சிறுகதைAbstract
ஆய்வுச் சுருக்கம்
இந்த ஆய்வுக் கட்டுரையானது, தற்கால தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மலேசிய இளைஞர்களின் பங்களிப்பு பற்றியதாகும். இன்றைய இளம் தலைமுறையினர்கள் இலக்கியத்தின்பால் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை போன்ற இலக்கியங்களை எழுதுவது மட்டுமல்லாமல் பல இலக்கிய போட்டிகளையும் செய்து கொண்டு வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, மலாயா பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற கல்விக்கூடங்களில் இருக்கும் இளைஞர்கள் பல இலக்கிய போட்டிகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி, மலேசிய எழுத்தாளர் சங்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம் போன்ற இயங்கங்களிலும் இலக்கியம் சம்மந்தமான பல நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை மிக சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இதன் வழி மலேசிய இளைஞர்கள், தற்கால தமிழ் இலக்கியம் வளர்ச்சியடைந்து வருவதில் பெறும் பங்களிப்பைக் கொடுக்கிறார்கள் என்பது தெரிகிறது.