எம்.ஜி.ஆர். என்னும் உயிரிரக்கப் பண்பாளர்
M.G.R: The Compassionate Human Being
Keywords:
எம்.ஜி.இராமச்சந்திரன், வறுமையின் கொடியநிலை, செயல்வீரர், இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி, இல்வாழ்க்கை நெறிகள்Abstract
ஆய்வுச் சுருக்கம்
இந்தக் கட்டுரை தமிழ்நாட்டு மக்களின் மனங்களைக் கவர்ந்த எம்.ஜி.இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்னும் திரைப்பட நடிகர், அரசியலில் வழுவாத வாய்மையர், உயிரிரக்கப்பண்பாளர், கருமமே கண்ணாகக் கொண்ட செயல்வீரர், இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி எனப்போற்றப்பட்ட பாண்மையர். இல்வாழ்க்கையில் அறம் மாறாமாண்புடையவர். கைம்பெண் திருமணத்தைச் சட்டமாக்கிய முற்போக்குச் சிந்தனையாளர். தமிழன்னைக்குத் தமிழ்ப்பல்கலைக்கழகம் நிறுவி அணிசெய்தவர். பொதுவாழ்வில் தூயவர் தாம் செய்யும் செயலுக்குப் பிரதிபலன் பாராதவர். இந்தியாவின் உயரிய “பாரத்”, “பாரத ரத்னா” உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்று தன்னடக்கத்தோடு நடக்கும் பண்புடையவர். எம்.ஜி.ஆர். என்னும் திரையுலக நடிகர் பொதுவாழ்வில் நடிக்கத் தெரியாத மாமனிதர். தமக்குத்தாமே வகுத்துக்கொண்ட கொள்கைகள் வாழ்வியல் கூறுகள், அப்பழுக்கற்ற மனிதப்பண்பின் விழுமியங்களை நாம் முழுதாக உணர்வதற்கு இக்கட்டுரை துணைபுரியும்.