ந.மகேஸ்வரியின் பார்வையில் பெண்ணியம் : ஓர் ஆய்வு
A Research on Feminism in N.Mageswari’s View
Keywords:
ந.மலேஸ்வரி, பெண்ணியம், பெண் விழிப்புணர்வு, தமிழ்ச் சிறுகதைகள், மலேசியத் தமிழ் இலக்கியம்Abstract
ஆய்வுச் சுருக்கம்
இந்த விமர்சனம் ந.மகேஸ்வரி என்ற எழுத்தாசிரியரின் சிறுகதையில் இடம்பெற்ற இந்தியப் பெண்ணின் கூறுகளைப் பற்றியதாகும். ந.மகேஸ்வரியின் சிறுகதைகளின் படைப்பில் பெண்களின் கூறுகளை அடையாளம் காண்பதையே இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இச்சிறுகதைகளில் பெண்களின் போராட்டத்தைப் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாசிரியர் ந.மகேஸ்வரியின் படைப்பாற்றலை மதிப்பிடுவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும், இந்த ஆய்வு பெண்களின் கூறுகளைச் சிறப்பாக அடையாளம் காணவும், இந்திய சமூகத்தின் சமூக கட்டமைப்பில் அவர்களின் நிலையை அங்கீகரிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த அணுகுமுறை பெண்கள் சமூகத்தில் அவர்கள் வைத்திருக்கும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்கும். இந்த ஆய்வு பெண்ணியத்தின் கருத்தை மையமாக் கொண்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம், ஆராய்ச்சியாளர்கள் பெண்களின் கூறுகளையும், பெண்களின் போராட்டத்தையும், ஆசிரியர் எழுத்தாளரையும் பற்றி விவரிக்கின்றனர். இதன்வழி ஆராய்ச்சியாளர்கள் பெண்களின் சுதந்திரத்தையும் பெண்கள் அனுபவிக்கும் வாழ்க்கையின் இன்னல்களையும் பற்றி தெளிவாக வலியுறுத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் இடம்பெற்ற பெண்களின் பிரச்சனைகள் மற்றும் பிரச்சனைகளைதக் தீர்ப்பதற்காக கையாளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்கின்றனர்.