சங்க இலக்கியத்தில் கல்வி
Education in Caṅkam Literature
Keywords:
சங்க இலக்கியம், இளமைக் கல்வி, குழந்தை வளர்ப்பு, அறிவுத்திறன், சங்க இலக்கியம்Abstract
ஆய்வுச் சுருக்கம்
கல்வியின் நோக்கம் எனப்படுவது அரசியல், பொருளாதார மற்றும் சமூக அமைப்புகள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் நிலவும் வாழ்க்கை தத்துவத்தைப் பொறுத்துத் தேசத்திற்குத் தேசம் அவ்வப்போது மாறுபடும். சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலட்சியங்கள் மற்றும் மதிப்புகளில் ஏற்படும் மாற்றங்களாலும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில், கல்வியின் நோக்கம் எனப்படுவது வாழ்க்கை சூழ்நிலைகளுடன் தொடர்புடையவை. எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி முறையும் ஒரு சமூகத்தின் உண்மையான சூழ்நிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். எந்தவொரு குழந்தையும் வெற்றிடத்தில் கல்வி கற்கக்கூடாது; கற்கவும் முடியாது. ஏனெனில் அக்குழந்தையும் சமூகத்தில் உறுப்பினராவார். பண்டைய கல்விமுறையினை அறிவதற்கு ஆதாரமாய் திகழ்வது இலக்கியமேயாகும். இலக்கியம் கடந்தக் கால வாழ்க்கை முறையினை படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும். செவ்வியல் இலக்கியங்களாகத் திகழும் சங்க இலக்கியத்தின் வாயிலாகப் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு விழுமியங்க்ளையும் நம்மால் அலசி ஆராய முடிகின்றது. வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் கொள்கை; அதனைக் கடைப்பிடிப்பிடிக்க அவர்கள் மேற்கண்ட வழிமுறைகளை ஆராயும் போது, பழந்தமிழர்களின் அறிவு முதிர்ச்சியினை உணர முடிகின்றது. அறிவு முதிர்ச்சி எனப்படுவது ஆழ்ந்த கல்வியறிவின் மூலமாக மட்டும்தான் பெற முடியும். அவ்வகையில் கல்வியின் அவசியத்தினை அறிந்து அதனை வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடித்துப் பழந்தமிழர் கல்வி கேள்விகளில் சிறந்து ஒழுகி வாழ்ந்தனர் என்ற பேருண்மையிணை சங்க இலக்கிய பாடல்களின் வழி நம்மால் அறிய முடிகின்றது.