பண்டைத் தமிழர் உணவில் புழுக்கும் சூட்டும்
Puzhukku and Choottu in the Food Habits of the Early Tamils
Keywords:
சூட்டு, புழுக்கு, பொங்கல், புன்கம், வாடூன், வறைAbstract
ஆய்வுச் சுருக்கம்
உணவுமுறை பண்பாட்டினின்று பிரிக்க இயலாத கூறாகும் . 'Who are the Dravidians' என்ற முனைவர் ஆன்ட்ரே F.ஜோபர்கின் ஆய்வுக்கட்டுரை மொழியியல், தொல்லியல், பண்பாடு, இனம்சார் தடயங்கள் ஆகியவை கொண்டு; திராவிட சமூகம் பன்முகத் தன்மை உடையதென உரைக்கிறது. அக்கருத்தின் வன்மை மென்மையை உணவுமுறை கொண்டு இக்கட்டுரை ஆராய்கிறது. முனைவர் ஜார்ஜ் ஹார்ட் பண்டைத் தமிழகத்தில் ஜாதிவேறுபாடு இருந்ததை நிறுவ; மீன் உணவு இழிந்தது எனக் கூறும் இரண்டு பாடல் சான்றுகள் தருகிறார். அக்கருத்தின் பெறுமதி பிற தொகைநூற் தரவுகளோடு பொருத்திப் பார்த்து அறிய வேண்டியதாக உள்ளது. ‘தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும்’ என்ற நூலில் சங்ககால உணவு பற்றிய செய்திகளைத் தொகுக்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை. அடுத்தகட்ட முயற்சியாக நாகரிகக் கூறுகளை விதந்து; சமூக பொருளாதார நிலையுடன் தொடர்புறுத்தி; ஆராய வேண்டிய தேவை உள்ளது. தொகைநூற் செய்திகள் முதல்நிலைத் தரவுகளாக; உரையாசிரியர், உணவகவியலார், தொல்லியலார் கருத்துகள் இரண்டாம்நிலைத் தரவுகள் ஆகின்றன. சமூகவியல் நோக்கில் பகுத்து அமையும் ஆய்வு பண்டைத்தமிழ்ச் சமூகத்தின் உணவுமுறையில் திராவிட ஆரியநாகரிகக் கலப்பு இருந்ததைக் காட்டுகிறது.