மொரீசியசில் தைப்பூசக் காவடித் திருவிழா: சமூகப் பண்பாட்டுக் கூறுகள்
Kavadee festival in Mauritius from a Socio - Cultural Perspective
Keywords:
திருவிழா, இனமக்கள், சமூக அளவிலும் பண்பாடு அளவிலும், விரதம், பக்தி வெள்ளம், ஒழுக்க நெறி, உடனிருந்து நோக்குதல்Abstract
ஆய்வுச் சுருக்கம்
மொரீசியசில் கொண்டாடப்படும் திருவிழாக்களுள் காவடித் திருவிழா குறிப்பிடத்தக்கது. முன் காலத்தில் நம் முன்னோர்களால் துவங்கிய இத்திருவிழா இக்காலத்தில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பல இனமக்கள் இதில் பயபக்தியுடன் கலந்துகொள்வதோடு காவடித் திருவிழாக் காலத்தில் தமிழர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். நாளடைவில் காவடித் திருவிழாவைச் சமூக அளவிலும் பண்பாட்டு அளவிலும் பார்ப்பது ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. காவடி விரதத்தின்போது பக்தர்களிடத்தில் ஏற்படும் மாற்றம், விரதத்தை மேற்கொள்ளும் விதம், காவடித்திருவிழா அன்று நிலவும் பக்தி வெள்ளம், கடைப்பிடிக்கும் ஒழுக்கநெறிகள் முதலிவற்றைப் பற்றி இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றன. இப்பணிக்குப் பண்பு சார் நூலக ஆய்வும் விளக்கவியல் ஆய்வுமுறையும் உடனிருந்து நோக்குதல் ஆய்வும் பின்பற்றப்பட்டுள்ளன. மொரீசியசு சமூகத்தில் முருகப்பெருமான் பெறுமிடத்தையும் முக்கியத்துவமும் தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாட்டையும் அறிவது இக்கட்டுரையின் முதன்மை நோக்கம் ஆகும்.