சித்த மருத்துவ நூல்களில் கிடைக்கும் இட்டலி பற்றிய தமிழிலக்கியச் சான்றுகள்
Tamil Literary Evidences for Iddali Found in Siddha Medical Texts
Keywords:
இட்டிலி, தொண்மைக் குறிப்புகள், கல்வெட்டுகள், தமிழ் இலக்கியம், சித்தர் மருத்துவ இலக்கியம்Abstract
ஆய்வுச் சுருக்கம்
இந்தியாவில் இட்டலி ஒரு தென்னிந்திய உணவாக வகைப்படுத்தப்படுகிறது. செரிப்பதற்கு எளிமையான இட்டலி சிறந்த காலை உணவாகவும் குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாகவும் சிறப்பிடம் பெற்றுள்ளது. தென்னிந்தியா முழுவதும் இட்டலி பரவலாக வழக்கிலிருந்தாலும் தமிழர்கள் இட்டலியை தமிழ்நாட்டிற்கே உரிய உணவாகக் கருதுகின்றனர். 12 முதல் 17ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தினைச் சேர்ந்த சித்த மருத்துவ நூல்களில் இட்டலி பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. சித்த மருத்துவ நூல்கள் தமிழக வரலாற்று ஆய்வில் மிகச்சிறிய அளவே கருத்தில் கொள்ளப்படுகின்றன. தமிழக வரலாற்று ஆய்விற்கு சித்த மருத்துவ நூல்களும் துணை புரியும் என்ற கருத்தை நிலைநாட்டும் விதமாக இக்கட்டுரையில் சித்த மருத்துவ நூல்களில் கிடைக்கும் இட்டலி பற்றிய குறிப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இட்லி / இட்டிலி என மருவிவிட்ட சொல்லை யாழ்ப்பாணத்தில் இன்றும் இட்டளி என்றே வழங்குகின்றனர் (பக்தவத்சல பாரதி, 2014, p.30). இக்கட்டுரையில் சித்த மருத்துவ நூல்களில் வழங்கப்படும் இட்டலி என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.