வீடும் விழுதுகளும் எனும் சிறுகதைத் தொகுப்பில் காணப்படும் சமூகவியல் கோட்பாடு ஓர் ஆய்வு (VeedhumVizhutugalum: A Sociological Analysis)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol9no2.7Keywords:
சிறுகதை, சமூகவியல் கோட்பாடு, பின்னனிகள், காரணம், சிக்கல்கள், தீர்வுAbstract
இலக்கியம் அழகு உணர்ச்சிகள் மிகுந்த கற்பனைப் படைப்பாகும். அன்று பேச்சு வடிவினில் தோன்றிய சிறுகதை இலக்கியம் இன்று எழுத்து வடிவினில் பரவளாக விரிந்து வளர்ச்சிக் கண்டு இருக்கின்றது. மலேசியாவில் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை பல்வேறு படிநிலைகளைக் கடந்து நம் நாட்டில் சிறந்த படைப்புகள் வெளியீடு கண்டு இருப்பதோடு உலக அங்கீகாரங்களும் பெற்று விளங்குகிறது. மலேசியாவில் பல சிறந்த எழுத்தாளர்கள் பல சிறந்த சிறுகதைகளை இன்றளவும் வாசகர்களுக்குப் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வண்ணம் மலேசிய சிறுகதைகளில் சமுகவியல் கோட்பாட்டினைத் தாங்கி மலரும் பல இலக்கியப் படைப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. அவ்வகையில், மலேசியா எழுத்தாளர் மா.சண்முக சிவா அவர்களின் கை வண்ணத்தில் உருவான வீடும் விழுதுகளும் எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளைக் கொண்டு இத்திறனாய்வு நகர்த்தப்பட்டுள்ளது. இவ்வாயிவின் நோக்கமாக இச்சிறுகதையில் காணப்படும் சமுதாயச் சிக்கல்களும் அதற்கான காரணங்களையும் கண்டறிவததோடு அதன் தீர்வுகளும் கண்டறிவதையே இவ்வாய்வுக் கட்டுரையில் நேர்த்தியாகப் படைக்கப்பட்டுள்ளது.