ஔசித்யக்கோட்பாடு: தொல்காப்பியமும் சமஸ்கிருத அலங்கார நூல்களும் (The Appropriateness Theory: Tholkappiyam and Sanskrit Rhetoric Texts)

Authors

  • Uma B., Ms. e Department of Tamil, G.Venkataswamy Naidu College, Kovilpatti, Tamil Nadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no2.4

Keywords:

ஔசித்யம், பொருத்தம், கோட்பாடு, அலங்காரம், தொல்காப்பியம், சொல், சொற்றொடர், காவியப்பொருள், குணம்,அணி, இரசம், வினைச்சொல், வேற்றுமை, பால், வசனம், உருபு, உரி, இடைச்சொல், காலம், இடம்.

Abstract

காஷ்மீர் நாட்டின் மிகப் பெரும் அறிஞர்கள் பலர் சமஸ்கிருத மொழித் திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ள பங்கு மகத்தானது. மகாமண்டலேசுவரர் என்னும் மிகப் பெரும் பெயர் பெற்ற அபினவகுப்தரின் சீடரான க்ஷேமேந்திரர் அக்காலத்தில் அந்தந்த துறைகளில் பெரும் பாண்டித்தியம் பெற்று விளங்கியுள்ளார். இதனால் இவருக்குப் பல்கலையும் கைவந்த கலையாயிற்று. தொல்காப்பியர் தம்நூலில் ஔசித்யம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆனால் இலக்கியத்தில் இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்ந்திருந்தார். எனவே இவ்விரு ஆசிரியர்களும் இலக்கியத்திற்குப் ‘பொருத்தக் கோட்பாடு' அவசியம் என்பதை உணர்ந்துள்ளனர்.  இலக்கியத்திற்கு எதனை ஆன்மாவாகக் கொள்ளலாம் என்ற விவாதத்தில் இரசக்கோட்பாடு, ரீதிக் கோட்பாடு, அணிக்கோட்பாடு, வக்ரோத்திக்கோட்பாடு, தொனிக்கோட்பாடு ஆகிய ஐவகை கோட்பாடுகள் உருவாகின. க்ஷேமேந்திரர் இலக்கியத்தின் ஆன்மாவாகக் கருதப்படக் கூடியது ‘ஔசித்யமே’ என்று குறிப்பிடுகிறார். ஔசித்யம் என்பது ‘பொருத்தம்’ என்று பொருள். எதைச் சொன்னாலும் அது அந்தந்த இடத்திற்கும் பாத்திரத்திற்கும் சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். அவ்வாறு பொருத்தம் இல்லாமல் போனால் அது இலக்கிய இன்பத்தையே கெடுத்துக் குலைத்துவிடும். ஆகவே, பொருத்தம் உள்ளவற்றைப் பொருத்தமான முறையில் கையாள்வதே ஔசித்யக் கோட்பாடகக் கருதப்படுகிறது. ஔசித்யம் என்ற கோட்பாட்டின் முக்கியத்துவத்தைச் சமஸ்கிருத இலக்கியத் திறனாய்வாளர்கள் அனைவரும் உணர்ந்திருந்தனர் என்பதனை இக்கட்டுரை இக்கட்டுரையின் மூலம் அறியமுடிகின்றது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2020-12-20

Issue

Section

Articles