2000-2009 – ஆம் ஆண்டுகளில் வெளிவந்த மலேசிய சிங்கப்பூர் சிறுகதைகளில் கையாளப்பட்ட பின்னோக்கு, நனவோடை, கடித உத்திகள்: ஒரு பார்வை. (The writing techniques employed in selected short stories in Malaysia and Singapore from years 2000 to 2009: A Review)

Authors

  • Veeramohan Veeraputhran, Mr. Tamil Language Programme, University Putra Malaysia.
  • Manimangai Mani, Ms. English Language Programme, University Putra Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no2.2

Keywords:

சிறுகதைகள், உத்திமுறைகள், பின்னோக்கு, நனவோடை, தற்கால இலக்கியம்.

Abstract

தமிழ்ச்சிறுகதை என்பது தற்கால இலக்கியத்தில் ஒரு முக்கிய இலக்கிய வடிவமாகத் திகழ்கின்றது. இச்சிறுகதையின் பரிணாம வளர்ச்சி தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு வரமாகும். 2000 - 2009- ஆம் ஆண்டுகளில் வெளிவந்த மலேசிய சிங்கப்பூர்ச் சிறுகதைகளில் கையாளப்பட்ட பின்னோக்கு, நனவோடை, கடித உத்திகள் ஒரு பார்வை எனும் இக்கட்டுரை இரு நாடுகளில் சிறுகதை ஆளுமைகள் இயற்றிய சிறுகதைகளில் மேற்கூறிய மூன்று உத்திகள் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மலேசிய எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவதோடு அவர்கள் கையாண்ட உத்திமுறைகளையும் வெளிக்கொணர இக்கட்டுரை வழிவகுக்கிறது. மேலும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க இவ்வுத்தி முறைகள் துணைபுரியும். 2000 முதல் 2009 வரை குறிப்பாக இந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த சிங்கப்பூர் மலேசிய தமிழ்ச் சிறுகதைகளைப் பகுப்பாய்வு அணுகுமுறையில் ஆராய்ந்து இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் முறையான உத்திகளைப் பயன்படுத்தி சிறுகதை வடிவத்தைப் பின்பற்றி தரமான படைப்புகளை இளைய எழுத்தாளர்கள் படைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் இன்னொரு நோக்கமாகும். இருநாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளில் காணப்படும் ஆளுமைகள் இதற்கு நல்லதொரு சான்றாகும்.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2020-12-20

Issue

Section

Articles