சோழர் காலத் தமிழ்ச் சமுதாயம் மனுதர்மச் சமுதாயமா? (Is Chola Period Tamil Society a Manu Dahrma Society?)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol9no2.6Keywords:
மனு தர்மம், பொற்காலம், பிராமணரின் ஆதிக்கம், கிராமங்களும்-நிலங்களும், பல்வகைத் தானங்கள்.Abstract
தமிழக வரலாற்றில் சோழர் காலம் பொற்காலமாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார நிலைகளில் தமிழகம் முன் எப்போதும் இராத சிறப்பு நிலையை எட்டிற்று. ஆனால் சோழ வேந்தர்கள் தமிழராய் இருந்த போதிலும் வடஇந்தியாவிலிருந்து வந்த பிராமணர்களுக்கு எல்லாத் துறைகளிலும் முக்கியத்தும் நல்கினர். அவர்கள் ஆரியர்கள் பின்பற்றிய மனு தர்மத்தைத் தீவிரமாகப் பின்பற்றினர். பிராமணர்களே சோழர் காலச் சமுதாயத்தைக் கட்டுப்படுத்தினர். சோழ மன்னர்கள் இப்பிராமணர்களுக்காக ஏராளமான சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினர். இது தவிர ஏராளமான நிலங்களும் அவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டது. அவர்கள் சோழர் ஆட்சியில் குலகுருக்களாகவும் முதலமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் அரசு உயர்அதிகாரிகளாகவும் பணியாற்றினர். சோழர் காலக் கோயில் நிர்வாகமும் அவர்களிடத்தே இருந்தது. இது தவிர நீதி நிர்வாகத்திலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். நாடு முழுவதும் பல வடமொழிக் கல்லூரிகள் சோழ அரசால் நிறுவப்பட்டது. சோழ அரசரின் பட்டாபிஷேகமும் அவர்களாலே நிகழ்த்துவிக்கப்பட்டது. சில சமயம் பிற தமிழ் இனத்தவரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுப் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன. சோழ மன்னர்கள் சாதி முறையைத் தீவிரமாகப் பின்பற்றி வந்தனர்.