மியன்மாவில் தமிழ்மொழி (Tamil Language in Myanmar)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol9no1.2Keywords:
மியன்மா, தமிழர்கள், தமிழ்மொழி, தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ்வர்த்தகர்கள், Myanmar, Tamils, Tamil language, Tamil developmentr, Tamil TradersAbstract
The major objective of the research is to explore the migration of Tamils and the Tamil language development in Myanmar. This qualitative research incorporates methods such as field work and library work. The findings show that the Tamils have migrated to Myanmar and have developed Tamil Language there. During the Chola period, Tamils migrated by sea to the southern part of Myanmar. During the British rule, the Tamils were taken to work in the paddy fields, construction sites and government departments. The Tamil Illam Tirukkural Peravai, Tamil Valarchi Maiyam, Kalaimagal Tamil Kalvi Niruvanam and Valluvar Kottam contribute to Tamil language development in Myanmar.This study is useful in teaching the younger generation about the development of Tamil language in Myanmar. Moreover, the researcher claims that this is the first attempt to contribute to the Tamil language development in Myanmar in the form of a research article.
இவ்வாய்வின் முதன்மை நோக்கம் மியன்மாவிற்குத் தமிழர்களின் வருகையையும் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் கள ஆய்வு, நூலாய்வு ஆகிய இரண்டு அணுகுமுறைகள் கையாளப்பட்டுள்ளன. இவ்வாய்வில் மியான்மாவிற்குத் தமிழர்களின் வருகையும் மியன்மாவில் தமிழ்மொழியின் வளர்ச்சியும் அடையாளம் காணப்பட்டுள்ளன. சோழர்ஆட்சி காலத்தில் தமிழர்கள் மியன்மாவின் தென் பகுதியில் கடல் வழியாகச் சென்று குடியேறியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நெல் வயல்களிலும் கட்டுமான துறைகளிலும் அரசாங்கத் துறைகளில் வேலை செய்வதற்கும் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழ் இல்லம் திருக்குறள் பேரவை, தமிழ்க்கல்வி வளர்ச்சி மையம், கலைமகள் தமிழ்க்கல்வி நிறுவனம், வள்ளுவர் கோட்டம் ஆகிய அமைப்புகள் மியன்மாவில் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகின்றன. இவ்வாய்வின் வழி, மியன்மாவில் தமிழ்மொழியின் வளர்ச்சிப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்வு மியன்மாவில் தமிழ்மொழியின் வளர்ச்சியை ஆய்வு செய்யும் முதல் கட்டுரை என்பதை ஆய்வாளர் உறுதி செய்கின்றார்.