அவுஸ்திரேலியப் புகலிடத் தமிழ் நாவல் வரலாற்றில் தாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' (The Importance of the novel Uyirvaasam by Taamaraichelvi in the History of Australia’s Tamil Novels)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol9no1.11Keywords:
Tamil Novel, Boat Peoples, Political Situation, Tamil Diaspora, தமிழ் நாவல்,படகு மனிதர்கள், அரசியல் சூழ்நிலை, புலம்பெயர் தமிழர், புகலிட வாழ்வுAbstract
Diaspora Literature is important for the growth of Elam’s Tamil literature. Tamil Diaspora writers are known for their various well-created works. Uyirvaasam novel by Taamaraichelvi is also such a novel that gained importance in history of Australia’s Tamil novels. The novel is about the Sri Lankan refugees who went to Australia by boat due to the volatile political situations within their country. This novel is known as the first one to record the plight of Sri Lankan Tamil Diaspora. The novel delivers realistic depictions of the hardships experienced by those Sri Lankans who made the journey to Australia: deaths that occurred, illnesses and diseases that ravaged the children and women as well as the sad incidents of these refugees being sent back to Sri Lanka after inquiries by Australian government are to name a few. These are presented in the novel through analytical, descriptive and historical approaches. It can be concluded that this novel focuses on subjects that are practically never mentioned in other Tamil novels that have been published in Australia thus far.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் புகலிடத் தமிழ் இலக்கியங்கள் முக்கியமானவை. பல்வேறு சிறந்த படைப்புகளை புகலிடத் தமிழ் எழுத்தாளர்கள் படைத்துள்ளனர். அவ்விதத்தில் அவுஸ்திரேலிய தமிழ் நாவல் வரலாற்றில் தாமரைச்செல்வியின் உயிர்வாசம் என்ற நாவல் மிகவும் முக்கியமாகதாகும். இந்நாவல் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற படகு மனிதர்கள் பற்றியதாக அமைந்துள்ளது. இவர்கள் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாகப் படகுமூலம் சென்றவர்களாவர். இப்பொருள் சார்ந்து வெளிவந்த முதல் நாவலாக இதுவே அமைகின்றது. இலங்கையர்களின் அவலம் நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து படகுமூலம் பயணம் செய்வது தொடக்கம் அவுஸ்திரேலியாவை அடைந்து பல்வேறு துன்பங்களை அடைவது வரை யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது. படகில் செல்லும்போது மரணமடைவது, சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவது, விசாரணையின் பின்னர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவது பற்றியும் பேசப்படுகின்றது. இவ்வாய்வு பகுப்பாய்வு, விபரணம் மற்றும் வரலாற்று முறையியல் ஆகிய அணுகுமுறைகளினூடாக முன்வைக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்த எந்த தமிழ் நாவலும் பேசாத விடயத்தை இந்நாவல் யதார்த்தமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதென்பது ஆய்வின் முடிவாக முன்வைக்கப்படுகின்றது.