மீளா அடிமை (An Irretrievable Slave)

Authors

  • Seeta Lechumi, Dr. Lecturer in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Keywords:

Saivism, Nalvar, The path of Bakthi, Lord Shiva, Devotees., சைவ சமயம், நால்வர், பக்திநெறி, சிவபெருமான், திருத்தொண்டர்

Abstract

Saivism is one of the major traditions of the Hinduism that has been existing since times immemorial. This tradition hails Lord Shiva as the only supreme being.ThirunyanaSambanthar, Thirunavukkarasar, Sundarar and Manikavasagar have been hailed as protectors and icons of Shaivism. The prime and sole objective of man’s birth is to merge with Lord Shiva and attain birthlessness isthe corephilosophy of Shaivism. Absolute knowledge, Yoga,Sariyai and Kriyai are the four pathways to attain Lord Shiva which has been strongly seen in the lives of the abovementioned  Saints of Shaivism.The Saints’ lives epitomize selfless, unconditional, immaculate and pristinestate of service and living.In line with theirembodiment of the above mentioned virtuesthe great four have created a formidable movement in the world of Bhakti.They lived lives of impeccable and immaculate purity ripe with selflessness and devotion with an unflinching integrity of thoughts , words and deeds.They servedthe world with fervent passion and earnestness and fostered Shaivism to its glory and elevated themselves spiritually.They lived lives of a slave by enslaving mundane propensities and vanity and merged with Lord Shiva.The article aims at delineating the aspects of selfless service and astute devotion of the great four apostles of Shaivism.

Keywords: Saivism, Nalvar, The path of Bakthi, Lord Shiva, Devotees.

 

ஆய்வுச்சுருக்கம்

சிவனை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சைவ சமயம்  காலநெடுமையைக் கடந்து நிற்கும் தனிப்பெறும் சமயமாகும். சைவநெறி தழைத்தோங்கி நிலைப்பெற அருந்தொண்டாற்றிய அடியார் பெருமக்களுள் தனிச்சிறப்புக்குரியவர்கள் சமயக்குரவர் நால்வராகிய திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர். இந்நால்வரும் சைவநெறியின் காவலராகவும் தளபதிகளாகவும் போற்றப்பெறுகின்றனர்.  மனிதப்பிறவியின் இறுதி நோக்கமே சிவப்பரம்பொருளுடன் கலந்து பிறவா பேரின்பநிலையை அடைவதாகும். நால்வர் பெருமக்களின் வாழ்வியலும் சிவப்பரம்பொருளை அடைவதற்குரிய சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நால்வகை நெறிகளை மக்களுக்கு விளக்கிக் காட்டுகின்றன. இப்பக்திநெறியில் நின்றொழுகிய சமயச் சான்றோர் பெருமக்களின் வாழ்வியல் எந்தவொரு எதிர்ப்பார்ர்ப்பும் இல்லாத தன்னலமற்ற தூயத் தொண்டுநிலையைப் பறைசாற்றுகின்றது எனில் மறுப்பதற்கில்லை. இதன் அடிப்படையில், சமயக்குரவர் நால்வரும் பக்தி உலகில் பேரியக்கத்தை உருவாக்கி, அகமும் புறமும் தூயத் திருத்தொண்டராய் மிளிர்ந்து மனம், மொழி, மெய்யால்  இறைவன்பால் மீளா அடிமையானவர்கள்; அவனருளாலே அவன்தாள் வணங்கியவர்கள்; ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதற்கேற்பத் திருத்தொண்டில் முதிர்ந்து சைவத்தின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றி உய்வுபெற்றவர்கள். அவ்வகையில், மீளா அடிமைநிலையால் சிவப்பரம்பொருளை அடைந்து பேரின்பப்பேறு பெற்ற நால்வரை ஆய்வின் எல்லையாகக் கொண்டு அவர்கள்தம் தொண்டுநெறி வெளிப்பாட்டினை ஆய்ந்தறிந்து விவரிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.    

 கருச்சொற்கள்: சைவ சமயம், நால்வர், பக்திநெறி, சிவபெருமான், திருத்தொண்டர்

Downloads

Download data is not yet available.

Author Biography

Seeta Lechumi, Dr., Lecturer in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

The author is a Senior Lecturer in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia. 

Downloads

Published

2019-12-25

Issue

Section

Articles