சமஸ்கிருத அலங்கார ஆசிரியர்களான யாஸ்கர், பாணினியின் உவமையணி விளக்கம் (An illustration of Sanskrit Similes by renowned Alangkara Exponents Yaskar and Panini)
Keywords:
YaÌ„skar, Panini, Rhetoric, Nirukta, AsÌ£tÌ£aÌ„dhyaÌ„yiÌ„, upamaÌ„, யாஸ்கர், பாணினி, அணி, நிருக்தம், அஷ்டாத்தியாயி.Abstract
When in a poetical composition, a comparison is made on the basis of similarity relating to quality and form, it is called upamā in Sanskrit and uvamai in Tamil. Yāskar, the author of Nirukta, states that upamā is comparing one with another. He furnishes five varieties of upamā with illustrations- karmopamā, bhūtopamā, rūpopamā, siddhopamā and luptopamā or arthopamā. However, the word upamā itself has several meanings, other than similarity in the Vedic literature. Apart from the Vedas, words like upamita and upamāna can be traced in the famous Aṣṭādhyāyī of Panini. The prominence of upamā as an individual figure of speech based on similarity is, however, established by the Sanskrit rhetoricians. Upamā holds the prime position among the figures of sense and is recognized by all Sanskrit rhetoricians. Here I discuss the explanation about upamā by Yaskar and Panini
Keywords: Yāskar, Panini, Rhetoric, Nirukta, Aṣṭādhyāyī, upamā
ஆய்வுச்சுருக்கம்
ஒரு கவிதை அமைப்பில் உள்ள பண்பு ஒப்புமை, தொழில் ஒப்புமை, பயன் ஒப்புமை ஆகியவற்றின் மூலமே உவமை உருவாகிறது. ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் உள்ள இவ்வகை ஒப்புமைகளை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். இது சமஸ்கிருதத்தில் உபமா என்றும் தமிழில் உவமை என்றும் கூறப்படுகிறது. நிருக்தம்(கி.மு.7) இதன் ஆசிரியரான யாஸ்கர் தம் நூலில் பெயர்ச்சொல், வினைச்சொல், உபசர்கம் (பெயர், வினை சேர்ந்து வருவது), நிபாதஸ் (ஒப்புமை) முதலானவை பற்றிக் குறிப்பிடுகையில் நிபாதஸ் என்ற பகுதியில் உவமை பற்றிக் கூறியுள்ளதைக் காணமுடிகின்றது. இவர் உவமையின் வகைகளாக, கர்மோபமா பூ4தோபமா ரூபோபமா, சித்4தோ3பமா, லுப்தோபமா என்று வகைப்படுத்துகிறார். உவமை என்ற சொல்லுக்கு வேத இலக்கியங்களில் ஒற்றுமையைத் தவிர வேறு பல அர்த்தங்கள் உள்ளன. அஷ்டாத்தியாயி(கி.மு.4). இதன் ஆசிரியரான பாணினி தம் நூலில் தொகை, வேற்றுமை, சந்தி, தத்தித ஒட்டு முதலானவை பற்றிக் கூறியுள்ளார். இவற்றில் தத்தித ஒட்டுவின் ஒரு வகையில் உவமை அணியைப் பற்றிக் கூறியுள்ளதைக் காணமுடிகின்றது. இவ்விரு ஆசிரியர்களும் உவமை அணியை விளக்கியுள்ள முறையை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
கருச்சொற்கள்: யாஸ்கர், பாணினி, அணி, நிருக்தம், அஷ்டாத்தியாயி.