பண்டைய ரோமானிய அரசுடனான தமிழக வணிகத் தொடர்புகள் பற்றிய ரோமானிய ஆவணங்கள் கூறும் செய்திகள் (Roman Trade Links with the Ancient Tamil Countries-Roman Documents)

Authors

  • Subashini K., Dr. Tamil Heritage Foundation International (International Organization for Preserving Tamil Heritage).

DOI:

https://doi.org/10.22452/JTP.vol8no1.7

Keywords:

Muziris, Thondi, Pandion, Korkai, Muziris Papyrus, Red Sea, Egypt., முசிறி, அகழ்வாய்வுகள், அலெக்சாந்திரியா, எகிப்து, இந்தியப் பெருங்கடல், செங்கடல், பாரசீகக் கடல்.

Abstract

Abstract

 

This paper deals with the ancient Roman Manuscripts and documents referencing Ancient Tamil countries' trade networks. This paper examines recorded information in The Peutinger Map, Muziris Papyrus, The Periplus of the Erythraean Sea, Bernardus Sylvanus Map as well as related sources in Plini the Elder and Strabo. It discusses the harbors, cities and infrastructure that were instrumental in trade exchanges between the Tamil countries of that time with the Roman entities, concomitantly with the commercial activities in the Indian Ocean. Research on selected ancient Roman Manuscripts and maps are included in this paper with the focus on trade route, goods and traders with special emphasis on cities like Muziris and Alexandria.   This paper suggests for an extensive study that includes wide range of further Roman period Manuscripts and emphasizes on the importance and the need for further archaeological excavation projects at the ancient South Indian Malabar coastal cities and Coromandel coast.

 

Key Words: Muziris, Thondi, Pandion, Korkai, Muziris Papyrus, Red Sea, Egypt.

 

ஆய்வுச்சுருக்கம்

 

இக்கட்டுரை பண்டைய தமிழ் நாடுகளுடனான ரோமானிய வர்த்தகம் தொடர்பான ரோமானிய ஆவணங்களை ஆராய்கின்றது. பண்டைய ரோமானிய ஆவணங்களான போயிட்டிங்கர் வரைப்படம், முசிறி பாப்பிரஸ், செங்கடல் பயணக் கையேடு, பெர்னாடுஸ் சில்வானுஸ் அவர்களது நில வரைப்படம் ஆகியவை இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றோடு ப்ளினி, ஸ்ட்ராபோ ஆகியோரது பண்டைய தமிழகம் பற்றிய ஆவணக் குறிப்புக்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.  எவ்வகையில் இந்த ஆவணங்களும் குறிப்புக்களும் பண்டைய தமிழக வணிகச் சூழலை விவரிக்கின்றன என்பதை இந்த ஆய்வுக்கட்டுரை வெளிப்படுத்துகின்றது. இவ்வாய்வுக்கட்டுரை, பண்டைய ரோமானிய மற்றும் தமிழக வணிக நகரங்களைப் பற்றியும், துறைமுகங்களைப் பற்றியும், துறைமுகங்களில் பண்டைய ரோமானிய அரசு ஏற்படுத்தியிருந்த வணிக நடைமுறைகளையும், அன்றைய சூழலில்  வழக்கிலிருந்த வர்த்தக சூழலையும், வணிக இடைத்தரகர்களைப் பற்றியும், நிலவழி மற்றும் கடல்வழி வணிகப் பாதைகளையும், வணிக ஒப்பந்தங்கள், ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட வணிகப்பொருட்கள்  பற்றியும் விவரிக்கின்றது.   பண்டைய தமிழக வணிகச் சூழலை ஆவணப்படுத்தியிருக்கும் ரோமானிய ஆவணங்கள், வணிகப் பெருவழிகளில் கையாளப்பட்ட நடைமுறைகளை விவரிப்பதோடு தமிழகத்தின் கடற்கரையோர நகரங்கள்,  அதில் குறிப்பாக முசிறி மற்றும் எகிப்திய வணிகமையமான அலெக்சாந்திரியா ஆகிய நகரங்களின் வணிக முக்கியத்துவத்தையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.   தமிழகத்தின் பண்டைய வணிகம் தொடர்பான விரிவான ஆய்வுகளுக்கு ஐரோப்பியரின் ஆவணக் குறிப்புகள் மிக முக்கியமானவையாக அமைகின்றன. இவை மேலும் விரிவாக தேடப்படவேண்டும், ஆராயப்படவேண்டும் என்னும் கருத்தை முன்வைப்பதோடு, தென்னிந்தியாவின் பண்டைய துறைமுகப் பகுதிகளிலும் அதன் சுற்றுப்புரத்தில் அமைந்துள்ள ஊர்களிலும் அகழ்வாய்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இக்கட்டுரை  வலியுறுத்துகின்றது.

 

குறிப்புச் சொற்கள்: முசிறி, அகழ்வாய்வுகள், அலெக்சாந்திரியா, எகிப்து, இந்தியப் பெருங்கடல், செங்கடல், பாரசீகக் கடல்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Subashini K., Dr., Tamil Heritage Foundation International (International Organization for Preserving Tamil Heritage).

  • The author is a Lead IT Architect, DXC Technology & President of Tamil Heritage Foundation International (International Organization for Preserving Tamil Heritage). ksubashini@gmail.com

Downloads

Published

2019-07-29

Issue

Section

Articles