தமிழும் சோதிடமும் (Tamil and Astrology)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol8no1.13Abstract
Abstract
Tamil language is a classical language and is one of the longest surviving classical languages. Recent archeology findings reveal that Tamil civilization was the oldest one. The trace of Tamil is seen all over the world. Also the root word analysis indicates that the most of the languages could not find its meaning in their language but makes correct meaning in Tamil language. Therefore it is clear that Tamil is the mother of all the languages. Tamil has been developed with 3 sangam (Era). The time of third (last) sangam period is said to be BC500 and could even be earlier. Therefore, the first and second sangam period could have been even older. Tholkappiyam is a work on the grammar of the Tamil language and the earliest extant work of Tamil literature and linguistics. The period at which the Tamil language had Grammar proves the antiquity and beauty of Tamil language. Tamil language evolved naturally. Tamil people’s life is completely based on the nature (Planets – Astrology). The knowledge and understanding of the ancient Tamil people about Nature – Planetary position (Astrology) is astonishing. Their festivals, rituals, life style, customs etc are evident that their life was completely based on the nature. The language that evolved naturally and the civilization that grew on the basis of nature should have similarity in it. This article explores such similarity and brings out how Tamil and their civilization are similar in their concepts. It also proves that the concepts evolved based on nature will have unique similarity.
Key Words: Tamil and Astrology, Tamils life style, Astrology, Nature, Tholkappiyam, Planets, Lemuria, Kumari kandam.
ஆய்வுச்சுருக்கம் :
தமிழ் மொழி ஒரு செம்மொழியாகும் மற்றும் பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றாகும். அண்மை தொல்லியல் கண்டுபிடிப்புகள், தமிழர் நாகரிகமே. பழமையான நாகரிகம் என்பதை வெளிப்படுத்துகிறது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் மற்றும் தமிழர்களின் தாக்கம் காணப்படுகிறது. சொற்களின் வேர்ச்சொல் ஆய்வு, பெருவாரியான மொழிகளில் அதன் மூல அல்லது வேர்ச்சொற்களின் பொருளை விளக்க இயலவில்லை. ஆனால் அதே சொல், தமிழ் மொழியில் சரியான அர்த்தத்தைக் குறிக்கிறது. எனவே தமிழ் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்பது தெளிவடைகிறது. தமிழ் மொழியானது பல்வேறு காலகட்டத்தில் சங்கங்கள் அமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. மூன்றாவது (கடைசி) சங்க காலம் கி மு500 என்று கூறப்படுகிறது, இது தோராயமான கால அளவே. சங்க காலம் என்பது அதற்கு முன்பும் இருக்க கூடும். ஆகையால், முதல் மற்றும் இரண்டாவது சங்க காலம் என்பது கிறித்து பிறப்பாண்டுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய காலமாக இருக்கும். தொல்காப்பியம் என்பது தமிழ் இலக்கணத்தை பற்றி கூறும் மிகவும் தொண்மையான, நூலாகும். (கி.மு.1000) ஒரு மொழிக்கான இலக்கணம் அந்த காலகட்டத்தில் இருப்பது என்பது அந்த மொழியின் தொன்மையை குறிக்கும். தமிழ் மொழி இயற்கையாக உருவானது. தமிழர்களின் வாழ்க்கை முற்றிலும் இயற்கையின் அடிப்படையில் (கிரகங்கள் - ஜோதிடம்) அமைத்திருந்தனர். இயற்கை பற்றிய தமிழ் மக்களுடைய அறிவு மற்றும் புரிதல் - அது சார்ந்த வாழ்வியல் கூறுகளை (ஜோதிடம்), அவர்களின் திருவிழாக்கள், சடங்குகள், வாழ்க்கை முறை, பழக்கவழக்கம் ஆகியன அடிப்படையாக கொண்டு அமைத்திருந்தனர் என்பதன் மூலம் தெளிவடைகிறது. எனவே இயற்கையை அடிப்படையாக கொண்டு உருவான மொழி மற்றும் வாழ்வியல் (ஜோதிடம்) ஒரே மாதிரியான கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கட்டுரை ஆராயப்பட்டு தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் வாழ்வியல் இயற்கையை மையமாகக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.
குறிப்புச் சொற்கள் : தமிழும் சோதிடமும், தமிழர்களின் வாழ்க்கை முறை, ஜோதிடம், இயற்கை, தொல்காப்பியம், கிரகங்கள், லெமுரியா(குமரி கண்டம்)