உபநிடத உரையாடலில் கருத்துமுதல்வாதத்தின் வகிபங்கு (The concept of idealism in the Upanishad dialogue)

Authors

  • Thavaseelan K., Mr. University of Jaffna, Jaffna, Sri Lanka,
  • Pavanesan V., Mrs. Hindu Civilization, university of Jaffna, Jaffna, Sri Lanka.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol8no1.12

Keywords:

உபநிடதம், உரையாடல், கருத்துமுதல் வாதம், ஆன்மா, பிரம்மம், உலகு., Upanishad, dialogue, Idealism, soul, Brahman, world.

Abstract

Abstract

 

The Upanishad forms the fountainhead of all philosophies in Indian philosophy. The term of the word 'Upanishad' literally means “To sit closer”. The Upanishads are privileged and a closed discussion that happened between a Guru of a higher spiritual plane and his closely seated deserving disciple. These are considered to be the epilogue for Vedas. There are evidences found from articles authored by various researchers that they belong to the period between 8th and 5th Century BC. The notion-driven discourses, contemplations on the aspects of Brahmam, Soul, Mundanity found in various relationships such as Guru- Disciple in Gurukula Fashion, Husband-Wife, God-Devotee, Ascetic-Student found in Upanishads have formed the basis of much later philosophies such as Advaita, Visishtadvaita, Dvaita, and Saivasiddhantha. The notion that only notion is true and it is the fundamental basis for all perspectives. Therefore the world, soul, God and all Physical bodies have been built around notions. This is called notion-driven discourse. An object-driven discourse is the one which gives which gives importance to objects in its approach. It can be seen that Upanishads give more importance to notion-driven discourses. This study is carried out on the basis that all fables of Upanishads are notion-driven concurrently taking Upanishad related literatures as boundaries and also using methodologies such as comparison, description and Historiography.    

 

Key Words: Upanishad, dialogue, Idealism, soul, Brahman, world.

 

ஆய்வுச்சுருக்கம்

இந்திய தத்துவ வளர்ச்சியில் அனைத்துத் தத்துவங்களுக்கும் அடிநாதமாக விளங்குவது உபநிடதமே ஆகும். உபநிடதம் என்ற சொல்லின் பொருள் ‘உப’ என்றால் நெருங்கி ‘நிஷத்’ என்றால் அமர்தல் என்பதும் நேரடியான பொருளைத் தருகின்றது. அதாவது ஆன்மீக நிலையில் உயர்ந்தோனாகிய குரு அதே நிலையை அடைய தகுதி உடைய சீடனை நெருக்கமாக அமர்த்தி அவருடன் இரகசியமாக உரையாடிய உரையாடலே இவ் உபநிடதங்கள் ஆகும். வேதத்தின் இறுதிப்பகுதியாக அமைந்த இது கி.மு 8 தொடக்கம் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்திற்குரியவை என பலர் குறிப்பிடுகின்றனர். இத்தகைய உபநிடதத்திலே குருகுலக் கல்வி முறையில் குரு சீடர்களாக, தந்தை –மகன், கணவன் - மனைவி, கடவுள் - பக்தன், முனிவர் - மாணவன், எனும் உறவு நிலைகளில காணப்பட்ட பிரம்மம், ஆன்மா, உலகம் பற்றிய கருத்துமுதல் வாதரீதியான உரையாடல்களும் விசாரணைகளுமே பிற்கால தத்துவங்களான அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், சைவசித்தாந்தம் முதலிய தத்துவங்களின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. கருத்துமுதல் வாதம் என்பது கருத்துக்கு முதன்மை கொடுத்து கருத்து மாத்திரம் தான் உண்மை, அனைத்திற்கும் கருத்தே அடிப்படை ஆகவே இந்த உலகு, ஆன்மா, இறைவன் போன்ற பௌதிக அதீதம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் கருத்துக்களின் அடிப்படையிலே கட்டமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்ற வாதமே கருத்துமுதல் வாதம் ஆகும். பொருளுக்கு முதன்மை கொடுக்கின்ற வாதம் பொருள் முதல் வாதம் ஆகும். ஆனால் உபநிடதங்கள் கருத்துக்களுக்கு மாத்திரம் அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் காணமுடிகின்றது. ஆகவே உபநிடத உரையாடல் வழி அமைந்த தத்துவக் கருத்துக்கள் அனைத்தும் எவ்வாறு கருத்துமுதல் வாதத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனை ஆராயும் நோக்கோடு உபநிடத உரையாடல் சார்ந்த இலக்கியங்களை மாத்திரம் ஆய்வு எல்லையாகக் கொண்டு ஒப்பீடு, விபரணம், வரலாற்றியல் முதலிய ஆய்வு முறைமைகளை கையாண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

 

குறிப்புச் சொற்கள்: உபநிடதம், உரையாடல், கருத்துமுதல் வாதம், ஆன்மா, பிரம்மம், உலகு.

Downloads

Download data is not yet available.

Author Biographies

Thavaseelan K., Mr., University of Jaffna, Jaffna, Sri Lanka,

  • The author is M.Phil. research student in the  Post graduate studies, University of Jaffna, Jaffna, Sri Lanka, kumarasamythavaseelan@gmail.com

Pavanesan V., Mrs., Hindu Civilization, university of Jaffna, Jaffna, Sri Lanka.

  • The author is a senior lecturer in the department of Hindu Civilization, university of Jaffna, Jaffna, Sri Lanka. vigna22969@gmail.com

Downloads

Published

2019-07-29

Issue

Section

Articles