திருக்குறளில் ‘தீ ’ந்திறம் (Thirukuralil ‘Thi’ Thiram)

Authors

  • Mooventhan P.S., Dr. Department of Tamil Studies & Research, Annamalai University, Annamalai Nagar, Tamil Nadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol8no1.9

Keywords:

World, five nature, Azhal, Eri, Sudar, Thanal, Fire, Heat, உலகம், ஐம்பெரும்பூதங்கள், அழல், எரி, கொல்லி, சுடர், தணல், தீ, வெம்மை.

Abstract

Abstract

Thirukkural is a unique literature in the literary world. It expounds the Tamil legacy and is heritage. It is not premised on any religion, or it stands in the way of Tamil as a religion. It epitomizes wisdom and insights that can absorbed and interrnalised by all living in the world. It considers the world’s humanity as one. Innovation in word, uniqueness in poetic sense, unprecedented in format are the hallmarks of the great literary work. The world, the worldly things and the movement (beliefs and practices) of the world are the words that are prevalent in this Tamil literature. The thoughts of the world and its people ​​were always in the thinking-gamut of Tamils. These are handled deftly by the poets for visual representation, commentary and philosophical content in a reflective or retrospective manner. The concept of the “first” is the resultant of a contemplative approach to the world and its state of affairs. Living with nature has been the top priority of the Tamil people. They greatly believed living life blended with nature such as Land, water, fire, air and sky. They strongly believed that the world’s existence is based on these. Consequently, the Sangam poets gave a lot of prominence to nature and its elements in their creations. Thirivalluvar not only highlighted the nature of the worldly things but also provided powerful insights of wisdom through them. His social experience and observation and the accent on the enormous strength of the nature’s five forces have been demonstrated in the Thirukkural on many instances. The discovery of the fire in the stone-age brought about a lot of changes in the way of life of the people who had lived then.  The utility of fire was considered to be the basis for social and cultural development of humanity. The Tamils understood the nature of the fire’s heat and luminosity. Their religion perceived fire as God and God as fire. They venerated it. They fear fire and worshipped it. They had the faith that fire is the rectifier for human- misgivings. They believed that they could attain salvation by burning the dead. There are a lot of words in Tamil that originates from the Tamil word for Fire.. Thiruvalluvar not only used Fire as a physical form in his work he also used fire and its characteristics in a metaphorical way. He provided virtuous insights using the description of the various characteristics of Fire. This article aims to elicit the deftness in which he has show-cased  various virtues and ideals of a man in the social, personal worldly aspects of man various divisions of Thirukkural. 

 

Key Words: World, five nature, Azhal, Eri, Sudar, Thanal, Fire, Heat

 

ஆய்வுச்சுருக்கம்

 

உலக மொழிகளில் தோன்றிய அறநூல்களில் திருக்குறள் தனித்தன்மை வாய்ந்தது. தமிழ் மரபினைப் போற்றுவது. எந்தவொரு சமயத்தையும் சாராது, தமிழ்ச் சமயத்தின் வழி நிற்பது. உலக மாந்தர் யாவரும் ஏற்கத்தக்க அறங்களைக் கூறுவது. உலகோர் யாவரையும் ஒன்றாகக் கருதும் தன்மையது. சொல்லில் புதுமை, யாப்பில் புதுமை, கருத்தில் புதுமை என பயில்தொறும் புதுமை தரும் திறன் கொண்டது. உலகம், உலகப்பொருள், உலகின் இயக்கம் ஆகியன தமிழ் இலக்கியத்தில் பரவலாக்கம் பெற்ற சொற்கள் ஆகும். உலகை முன்னிறுத்தியே தமிழர்களின் சிந்தனைகள் அமைந்தன. இவை காட்சி விளக்கத்திற்கும், கருத்துப் புலப்பாட்டுக்கும், தத்துவப் பொருளுரைத்தற்கும் புலவர்களால் ஆளப்பட்டுள்ளன. உலகம் குறித்த ஆய்வுச் சிந்தனையால் எழுந்ததே முதற்பொருள் என்னும் கருத்தாக்கமாகும். அவ்வகையில் தமிழர் வாழ்வில் இயற்கை முதலிடம் பெற்றது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அவர்கள் பெரிதும் நம்பினர். நிலம், நீர், தீ, வளி, வான் ஆகியன உலகப் பொருள்கள் என்பதனையும், உலகத்தின் இயக்கம் இவற்றைச் சார்ந்தே அமைகிறது என்பதனையும் நன்கு அறிந்திருந்தனர். அதனால், சங்கப் புலவர்கள் இவற்றிற்கு முதன்மை தந்து பாடல்கள் படைத்தளித்தனர். உலகப் பொருள்களின் இயல்புகளைத் தெளிவுபடுத்தியதோடு மட்டுமல்லாது அதன்வழி அறக்கருத்துக்களை எடுத்துரைத்தவர் திருவள்ளுவர். அவரது உலகியல் அனுபவமும் உற்றுநோக்கலும், ஐம்பெரும்பூதங்களின் ஆற்றல் புலப்பாடும் திருக்குறளில் பெருமளவில் காட்டப்பட்டுள்ளன. தொன்மைச் சமுதாயத்தில் தீயின் கண்டுபிடிப்பு அவர்தம் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்கள் பலவாகும். மனித சமூக வளமைக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்தது தீயின் பயன்பாடே. தமிழர்கள் தீயின் தன்மையை, வெம்மையை நன்கறிந்திருந்தனர். தீயை அச்சம் தரும் ஒன்றாகக் கருதி, அதற்கு வழிபாடுகள் செய்தனர். தீயைக் கடவுளாகவும், கடவுளே தீயாக விளங்குவதாகவும் சமயங்கள் எடுத்துரைத்தன. மனிதத் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்குத் தீயே உபாயக்கருவி என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. தவறுகளைத் தீ கொண்டு தண்டிப்பதன் மூலமும், இறந்த உடல்களை எரிப்பதன்மூலமும் நற்பேறு பெறலாம் என்று நம்பினர். தமிழில் தீ என்பதனை அடிச்சொல்லாகக் கொண்டு ஏராளமான சொற்கள் உருவாகியுள்ளன. சுட்டெரிக்கும் தீயின் வெம்மையையும், ஆற்றலையும், ஒளிவீசும் தன்மையையும் அழல், அனல், எரி, தணல், தீ, நெருப்பு முதலான சொற்கள் காட்டுகின்றன. தீயைக் காட்சிப்பொருளாக மட்டுமன்றி, கருத்துப் பொருளாக எடுத்துரைத்தவர் திருவள்ளுவர். அவ்வகையில் தீயின் இயல்புகளையும், தன்மைகளையும் காட்டியுள்ளதோடு, அவற்றின் வழியாக அறமுரைத்த சிறப்புக்கு உரியவராகத் திகழ்கிறார். தனிமனித ஒழுக்கத்தைப் பற்றிப் பேசும் அறத்துப்பாலிலும், சமுதாய நடத்தையைப் பேசும் பொருட்பாலிலும், இல்லற வாழ்க்கையின் இனிமையைப் பேசும் இன்பத்துப்பாலிலும் தீயின் ஆற்றல், செயல், வலிமை, மென்மை, அறிதிறன், செயல்பாடு, பயன்பாடு, வாழ்வில் முரண்பட்ட தன்மை ஆகியன முப்பால் அறங்களுக்கும் ஏற்றவாறு பொருத்தமுறக் காட்டியுள்ள திறத்தினை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

 

குறிப்புச் சொற்கள்: உலகம், ஐம்பெரும்பூதங்கள், அழல், எரி, கொல்லி, சுடர், தணல், தீ, வெம்மை.

Downloads

Download data is not yet available.

Author Biography

Mooventhan P.S., Dr., Department of Tamil Studies & Research, Annamalai University, Annamalai Nagar, Tamil Nadu, India.

  • The author is an Assistant Professor in the Department of Tamil Studies & Research, Annamalai University, Annamalai Nagar, Tamil Nadu, India. psmnthn757@gmail.com

Downloads

Published

2019-07-29

Issue

Section

Articles