இலங்கையின் சிங்கள-தமிழ் இனமுரண்பாடு: அடிப்படைக் காரணிகள் குறித்த ஒரு பகுப்பாய்வு (Sinhala-Tamil Ethnic Conflict in Sri Lanka: An Analysis on its Root Causes.)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol8no1.1Keywords:
இலங்கை, சிங்கள-தமிழ் இனமுரண்பாடு, உள்ளூர் யுத்தம், சமாதானச் செயன்முறை., Sri Lanka, Sinhala-Tamil ethnic conflict, civil war, peace process.Abstract
Abstract
Sri Lankan Sinhala-Tamil ethnic conflict is an infamously referred conflict in the modern world. The Sinhala-Ethnic conflict resulted in a three-decade civil war. All the initiatives to resolve the Sri Lankan ethnic conflict became unsuccessful due to the abject failure to understand its root causes hence addressing them. This article analyses the influence of the identified root causes to the Sinhala-Tamil ethnic conflict in Sri Lanka. This study has found that the debate over the historical origin of major ethnic groups, their territorial politics, divide and rule policy of British’s colonial rulers, ethno-centric political reforms, representative systems, official language policy, opposition to devolution of power, policies in the matters of land, higher education and settlement programs have immensely contributed to the origination and proliferation of Sinhala-Tamil ethnic conflict in Sri Lanka. This study concludes that the exploring and finding solutions to these root causes alone can help to resolve ethnic conflict and facilitate the reconciliatory process in Sri Lanka.
Key Words: Sri Lanka, Sinhala-Tamil ethnic conflict, civil war, peace process.
ஆய்வுச் சுருக்கம்
இலங்கையின் சிங்கள-தமிழ் இனமுரண்பாடு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தவொன்றாக உள்ளது. இனமுரண்பாட்டின் தீவிர விளைவு மூன்று தசாப்த ஆயுதப்போராட்டத்துக்கு வழிவிட்டிருந்தது. இனமுரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணிகளை முறையாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காததன் காரணமாக இனமுரண்பாட்டை தீர்ப்பதற்கான எல்லா முயற்சிகளும் தோல்வியையே அடைந்தன. இந்தக் கட்டுரை இலங்கையின் சிங்கள-தமிழ் இனமுரண்பாட்டுக்கான அடையாளம் காணப்பட்ட அடிப்படைக் காரணிகளின் செல்வாக்கினை பகுப்பாய்வு செய்கிறது. இனத்துவ பூர்வீகம் குறித்த வாதங்கள் மற்றும் ஆள்புல அரசியல், பிரித்தானியர்களின் பிரித்தாளும் கொள்கை, இனச்சார்ப்பு அரசியல் தீர்திருத்தங்கள் மற்றும் பிரதிநிதித்துவ முறைகள், அரசகரும மொழிக்கொள்கை, அதிகாரப் பகிர்வுக்கான எதிர்ப்பு, கல்வி, காணிச் சீர்திருத்தக் கொள்கைகள் மற்றும் திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்கள் போன்ற காரணிகள் செல்வாக்குமிக்க வகையில் சிங்கள-தமிழ் இனமுரண்பாடு தோற்றம்பெறவும் வளர்ச்சிபெறவும் பங்களிப்புச்செய்திருப்பதை இவ்வாய்வு அடையாளம் கண்டுள்ளது. இனமுரண்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்திருந்த மேற்படிக் காரணிகளை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வுகாண்பதன் ஊடாகவே இனமுரண்பாட்டை தீர்ப்பதும் இனங்களுக்கிடையேயான உறவுகளை கட்டியெழுப்புவதும் சாத்தியமாகும் என்பதை இவ்வாய்வு வலியுறுத்துகிறது.
குறிப்புச் சொற்கள்: இலங்கை, சிங்கள-தமிழ் இனமுரண்பாடு, உள்ளூர் யுத்தம், சமாதானச் செயன்முறை.