நாலடியாரில் உய்யச்சிந்தனை வெளிப்பாடு (Critical thinking in Naladiyar)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol4no1.8Abstract
Critical Thinking is one of the important portions of Higher Order Thinking Skills (HOTS) which is widely discussed and used nowadays in almost in all fields. As we know, the field of Critical Thinking is introduced by Western philosophers and educationists by the name Critical Thinking. The Eastern thinkers, especially the Tamil philosophers who belong to a long time history and culture and thoughts immemorial have applied these Critical Thinking skills very long ago. But they did not name it as it is called now, Critical Thinking. This paper attempts to proof that, Tamil language as the oldest language in the world has been using Critical Thinking around 2000 years back through its vast and rich literature especially Naladiyar.
Key words:
Naladiyar, Critical Thinking, FRISCO Approach, Higher Order Thinking Skills, Tamil philosophers.
ஆய்வுச் சுருக்கம்:
பெருவெளி சிறுவெளியாகிவரும் இன்றைய உலகில், உயர் நிலைச் சிந்தனைத் திறன்,HOTS (Higher Order Thinking Skills) எல்லாத் துறைகளிலும் பேசப்படுகிறது; பயன்படுத்தப்படுகிறது. இந்த உயர் நிலைச் சிந்தனைத் திறன்,உய்யச் சிந்தனை (Critical Thinking), ஆக்கச் சிந்தனை (Creative Thinking), சிந்தனைத் தலையணி(Thinking Hats) எனப் பல்வகைப் பெயர்களில் வலம் வருகின்றது. குறிப்பிட்ட இந்தப் பெயர்களில் இவை நமக்கு மேற்குலகால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழர்கள் இவற்றைக் கைவரப்பெற்று முன்னரே பயன்படுத்தியுள்ளனர் என்பதை நற்றமிழ் இலக்கியங்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துணர்த்துகின்றன. நாலடியார் எனும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் இந்த உயர் நிலைச் சிந்தனை ஆற்றலை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த நூலாக அமைந்துள்ளது.
குறிப்புச் சொற்கள்:
நாளடியார், உய்யச் சிந்தனை, FRISCO அணுகுமுறை, உயர் நிலைச் சிந்தனைத் திறன், தமிழ்த் தத்துவங்கள்.