பாரதிதாசனின் பெண்கல்விச் சிந்தனையும் இன்றைய பெண்களின் கல்விச் சிந்தனையும் ஓர் ஆய்வு. (Bharathidasan's idea on women's education and today's women's idea of education: a study.)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol3no1.10Abstract
The revolutionary Poet Pavender Bharathidasan excels among the poets of the Twentieth Century. During his time, the male chauvinist society treated women as slaves and deprived them from the basic rights in the society. Bharathidasan’s poetry was a reaction to this and paved the way for many reforms in the social upliftment of women in the society. This has become evident in the 21st Century. This Paper researches how Pavender’s poetry and ideas brought about progress in the status of women. In particular, women education is a favourite idea of Pavender. It is evident that by comparing the past and present; Pavender’s works converted the condition of women to betterment.
Key words:
Bharathidasan, Women Education, Women Thoughts and its importance, male chauvinist society.
ஆய்வுச் சுருக்கம்:
இருபதாம் நூற்றாண்டில் கவிதை உலகில் ஈடு இணையற்ற பெருங்கவிஞரில் ஒருவராக புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தோன்றினார். அன்றைய சூழ்நிலையில் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாகவே வாழ்க்கை நடத்தி வந்தனர். இதனைக் கண்டு கொதிதெழுந்த பாரதிதாசன் பெண்ணடிமை, பெண்ணுரிமை எனப் பலவாறான கருத்தைத் தம் கவிதைகள் மூலம் வெளிப்படுத்தினார். பெண்கள் விடுதைலைப் பெறுவதற்குப் பெண் கல்வி மிக அவசியம் என்று கல்வியில் முக்கியத்துவத்தைப் பெண்களுக்கு உணர்த்தினார். பெண்கள் கல்வி கற்பதால் அடையும் பயன்களையும் தம் படைப்புகள் மூலம் எடுத்திரைத்தார். அவர் ஏற்படுத்திய பெண்கல்வி சிந்தனை இருபத்தோராம் நூற்றாண்டு பெண்கள் வாழ்வில் முன்னேறுவதற்குப் பெரும் பாலமாக அமைந்தது. ஆகவே, பாரதிதாசன் ஏற்படுத்திய பெண்கல்வி சிந்தனை இன்றைய பெண்களுக்கு எவ்வகையான கல்வி சிந்தனை மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதை ஒப்பிட்டு காண்பதை இக்கட்டுரை பிரதிபலிக்கின்றது.
குறிப்புச் சொற்கள்:
பாரதிதாசன், பெண் கல்வி, பெண்கள், சிந்தனை, முக்கியத்துவம்