திருமுறைகளில் இயற்கை வருணனை (The picturisation of nature in Thirumurais)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol2no1.9Abstract
The Tamils had been having the imbibed habit of worshiping Nature as a way of life. Later this habit was clouded with various insertions. During that time many Saints tried their best to set this situation on the right track. Through the twelve Thirumuraigal, they endeavored this task. The songs of Appar, Sundarar, Manickavasagar, Sambandar and the Saints who sang in the Ninth Thirumurai contributed to this effort of describing Nature. These Songs not only praised Nature but also attempted to sow the seeds of devotion on God. That is why in Temples, trees have been planted by way of a specific / respective temple tree representing that Temple. Also the songs seem to have the merits of Sangam Literature. In addition, the songs equated God and Nature. The idea that Man and Nature lived dependent on each other is also hinted at in these creations. This Paper tries to vividly bring out all these aspects.
Key words:
Thirumuraigal, Nature, God and Man, Man and Nature, Sangam Literature.
ஆய்வுச் சுருக்கம்:
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்ததால் இயற்கையாகவே இறைவனைக் கண்டு வணங்கினான் தமிழன். பிற்காலத்தில் இச்சிந்தனை பல்வேறு புரிதல்களால் வளர்ந்தது. அந்த சமயத்தில் பல்வேறு அருளாலர்கள் தோன்றி இச்சிந்தனையைச் செரிவான பாதையில் கொண்டு செல்ல முயற்சித்தனர். அருளாலர்கள் பன்னிருதிருமுறைகளின் வாயிலாக இப்பெரும் பணியைச் செய்தனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர், ஒன்பதாம் திருமுறையை அருளிய அருளாலர்கள் ஆகியோர் இயற்கை வருணனைக்குப் பங்களித்துள்ளனர். இப்பாடல்கள் இயற்கையின் சிறப்பை மட்டும் பாடாது இறையின் வித்து அதில் உள்ளதை காட்டும் பணியாகவும் அமைந்துள்ளது. ஆகையால்தான் ஆலயங்களில் மரங்களாவன குறிப்பாகவும், போற்றுதலுக்குரியதாகவும், ஆலயத்தை அடையாளப்படுத்துவதாகவும் நடப்பட்டுள்ளன என இவ்விலக்கியம் சுட்டுகிறது. இதனால் சங்க இயக்கியத்திற்குரிய சிறப்புகள் பன்னிருதிருமுறையிலும் மிளிர்கின்றன. கூடுதல் செய்தியாக இவ்விலக்கியங்கள் இறையையும் இயற்கையையும் இணைத்தே காட்டியுள்ளன. மனிதனும் இயற்கையும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன எனும் சிந்தனையும் படைப்பில் உள்ளது அறியப்படுகின்றது. இக்கட்டுரை இச்சிந்தனைகளையே முன்னிருத்தி ஆய்ந்துள்ளது.
குறிப்புச் சொற்கள்:
திருமுறைகள், இயற்கை, இறையும் மனிதனும், மனிதனும் இயற்கையும், சங்க இலக்கியம்