மானுட மேம்பாட்டிற்குப் பாரதியாரின் பக்தி அனுபவங்கள்
The Dive Experiences of Bharathi in the Upliftment of Mankind
Abstract
Mahakavi Barathiar had a strong faith and believes in God. Besides that, his life was filled with good deeds and strive towards development of humankind. Bharathi’s approach in spirituality and devotion to almighty is absolutely differ from other poets. He respected all religions and all gods. He has composed hymns upon all deities of all religions. He also established his own path towards devotion and has expressed it in his poems. Bharathi who had a strong faith in god, sees the needs of people through their life experiences. The essay explained how Bharathi shows his faith in God through helping human to achieve a better development of mankind.
Key Words:
Bharathiar, Devotional, Human Development, spirituality, Community.
ஆய்வுச் சுருக்கம்:
மகாகவி பாரதியாரின் கடவுள் பக்தியும் நம்பிக்கையும் மனிதகுலத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே அமைகின்றது. பாரதியார் சமயங்கடந்து பல தெய்வங்களையும் போற்றினார். பல தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொண்டாலும் தெய்வம் ஒன்றுதான் என்பதை அடிநாதமாகக் கொண்டவர். அவர் பக்திக்கு தனது சொந்த பாதையை அமைத்து, தனது கவிதையில் அதை வெளிப்படுத்தினார். பாரதியாரின் பக்தி கொள்கைகளைச் சமூகம், ஒருமைப்பாடு, பக்தியின் மேன்மை, வேண்டுதல் மற்றும் மூட பக்தி எனும் அடிப்படையில் தமது படைப்புகளைப் படைத்துள்ளார். மனிதகுலத்தின் மேம்பாட்டிற்குத் துணைபுரியும் வகையில் அனைவரும் கைக்கொள்ளத்தக்க பக்தி நெறியே பாரதியாரின் பக்திநெறியாகத் திகழ்கின்றது என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்புச் சொற்கள்: பாரதியார், பக்தி, மானுட மேம்பாடு, ஆன்மீகம், சமுதாயம்