புறநானூறு சாற்றும் சங்ககால மக்களின் வழிபடு கடவுளர்
The Deities of Sangam People through Purananuru
DOI:
https://doi.org/10.22452/JTP.vol5no1.6Abstract
The ancient pieces of literature of Tamil People are Tholkappium and Sangam literature. Sangam literature is classified into two such as Pathupattu and Ettruthohai. Further, these come under two divisions called Aham and Puram, which speak about personal and social life respectively. Purananuru deals chiefly the social life of the Tamil People. It includes Kingship, Justice, Warfare, Commerce, Trade, Business, Art, Communities, beliefs, rituals, food, shelter, attire and so on. Purananuru deals with the Tamil deities, nature of worhsip and faith. Even the first song of Purananuru centers around Lord Shiva and also many poems deal with the Primary god of Tamils Lord Muruga, Vishnu, Indiran, Yama, Kannan. It does not stop with gods. It talks also about karpaha virutcham, kamadhenu and nectar in heaven. In a nut shell, Purananuru helps us to understand the life and culture of ancient tamil people.
Key Words:
Purananuru, Sangam literature, gods of Tamil People, beliefs, Semiotics
ஆய்வுச் சுருக்கம்:
தமிழர்களின் மிகப் பழமையான இலக்கியங்களாகத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் விளங்குகின்றன. இவற்றுள் சங்க இலக்கியங்களாவன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் இருபெரும் பிரிவுகளுள் அடங்கும். இவற்றின் இலக்கிய வகைமையை அகம் புறம் எனப் பகுப்பர் அறிஞர். அகம் பழந்தமிழரின் காதல் வாழ்க்கையையும், புறம் இவர்களின் சமூக வாழ்க்கையையும் சுட்டுகின்றன. பழந்தமிழரின் புற வாழ்க்கையைக் காட்டவல்ல சங்க இலக்கியங்களுள் புறநானூறு தனித்துவம் உடையது. சங்ககாலப் பழந்தமிழர்களின் அரசாட்சி, நீதிமுறை, போர்ச் செய்திகள், வணிகம், தொழில்கள், கலைகள், சமூகப் பிரிவுகள், நம்பிக்கைகள், சடங்குகள், உணவு, இருப்பிடம், ஆடை அணிகலன்கள் எனச் சமூகவியல் சார்ந்த பல்வேறு கூறுகளைக் காட்டவல்லது புறநானூறு. இவற்றுள் பழந்தமிழர்களின் சமய நம்பிக்கககளும், அவர்கள் வழிபாடு செய்த கடவுளர்களைப் பற்றிய செய்திகள் பலவும் புறநானூற்றுப் பாடல்களுள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் காட்டுகின்றன. பெருங்கடவுளாகிய சிவபெருமானைப் பற்றிய குறிப்புகள் செறிவாகக் காணப்படுகின்றன. புறநானூற்றின் முதல்பாடலே சிவபெருமானை பற்றிய ஆழ்ந்த குறிப்புகளைக் கூறவல்லதாக அமைந்துள்ளது. சிவபெருமானைத் தவிர்த்துத் தமிழ்கடவுளாகப் போற்றப்படும் முருகப்பெருமான், முல்லை நிலக்கடவுளாகிய திருமால் போன்ற கடவுளர்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. மேலும், இந்திரன், எமன், காமன் முதலான தேவர்களைப் பற்றியும், தேவருலகில் காணப்படும் கற்பகவிருட்சம், அமுதம் போன்றவை குறித்தும் புறநானூறு எடுத்துரைக்கின்றது. இவை அனைத்தும் பழத்தமிழர்களின் வழிபடு கடவுளர்களைப் பற்றி அறிந்து கொள்ளப் புறநானூறு ஓர் ஆவணமாக உள்ளதை காட்டுகிறது.
குறிப்புச் சொற்கள்: புறநானூறு, சங்க இலக்கியம், தமிழர் வழிபடு கடவுளர், நம்பிக்கைகள், குறியீட்டுக் கோட்பாடு