நீதி இலக்கியம் சாற்றும் தலைமைத்துவப் பண்புகள்
Leadership qualities depicted in Moral Literature
DOI:
https://doi.org/10.22452/JTP.vol6no1.8Abstract
Pathinen Keezh Kanaku Noolgal are considered as Moral literature in the history of Tamil literature including Thirukkural. Iynthinai, Imbathu, Thinaimozhi Imbathu, Anthinai Ezhubathu, Thinaimalai Noothiriymbathu, Kainilai, Kar Narpathu are said to be Aham literature and Kalavazhi Narpathu as Puram literature. These also indicate morals these ave the way for the upliftment of a man. Leadership quality in an inevilable feature in the betterment of a man. This does not only develop a man but also the society around him. The seven characteristics pointed out in the Western thought had already been resent in the tamil moral literature. This paper brings out how ancient tamil literature show the leadership qualities.
Keywords:
Tamil Moral Literature, Theory of Leadeship, Leadership Principle, Society, Tamil Literature
ஆய்வுச் சுருக்கம்
தமிழ் இலக்கிய வரலாற்றில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை நீதி இலக்கியங்கள் எனக் குறிப்பிடுவர். திருக்குறள் முதலாய 18 நூல்களையே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களெனக் குறிப்பிடுவதுண்டு. இவற்றுள்ளும் ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, அந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது ஆகிய ஆறு நூல்களை அகத்திணை இலக்கியமாகவும், களவழி நாற்பது எனும் நூலைப் புறத்திணை இலக்கியமாகவும் அறிஞர்கள் பகுப்பர். ஆயினும் கூட இவையும் மனித வாழ்க்கைக்கான அறத்தைத் தொட்டுப் பேசுவதால் நீதி இலக்கியங்களாகவே தொகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீதி இலக்கியங்களாவன அறத்தைப் போதிப்பதோடு நின்றுவிடாமல் மனித மேம்பாட்டுக்கான வழியையும் காட்டுவனவாக அமைந்துள்ளன. மனிதனின் மேம்பாட்டுக்கு மிக அவசியமானதாக விளங்குவது தலைமைத்துவப் பண்பு. தலைமைத்துவப் பண்பானது தனி மனிதன் தன்னை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமல்லாது இனம், சமுதாயம், நாடு என அனைத்தையும் மேம்படச் செய்யும் ஆற்றலுடையது. மேலை நாட்டில் உருவான தலைமைத்துவக் கோட்பாடு ஏழு முதன்மைப் பண்புகளை தலைமைத்துவப் பண்புகளாக வகுத்துள்ளது. அக்கோட்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஏழு முதன்மைப் பண்புகள் நீதி இலக்கியங்களில் நிறைவாகச் சுட்டப்பட்டுள்ளன. நீதி இலக்கியங்களை உட்படுத்தும் போது இவை இக்கோட்பாடு சுட்டும் செய்திகளிலும் மேம்பட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதை ஆய்வின் வெளிப்பாடாக அறிய முடிகிறது.
குறிப்புச் சொற்கள்:
தமிழ் நீதி இலக்கியம், தலைமைத்துவக் கோட்பாடு, தலைமைத்துவ கொள்கை, சமுதாயம், தமிழ் இலக்கியம்.