“பாண்டியன் பரி” சில் படிமம் – மொழிபெயர்ப்புச் சிக்கல்

Impressimison in Bharathidasan’s Pandian Parisu – Problem in Translation

Authors

  • Umadevi Naidu Allaghery, Ms. Department of Tamil, Mahatma Gandhi Institute, Mauritious.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol6no1.6

Abstract

Pavendan Bharathidasan in one of the Pioneers in Tamil literature and he made use of many faculties in his poetry. In the game called short literature, he made his mark with deep intellectual thoughts. Pandian Parisu is the historical approach in this context. Which has been translated into English. Usually translating one literature into other languages is not an easy task. It is really a challenge to keep the spirit of the some language into the translated language. To express imagination, poets make use of comparison, imagery, impression and symbols. This paper deals with how impressionism and the techniques of translation used in Pandian Parisu.

 

 

Key words: Pavendan Bharathidasan, Pandian Parisu, Translation, Literature, Novel

ஆய்வுச் சுருக்கம்

தமிழ் இலக்கிய உலகில் தோன்றிய தன்னிகரற்ற கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் புரட்சிக்கவி பாரதிதாசன். பாவேந்தர் பாரதிதாசன் பல துறைகளில் புதிய கண்ணோட்டத்தில் கவிதைகளைப் படைத்துப் பலரை வியக்கச் செய்துள்ளார். அவர் ஆழ்ந்த சிந்தனையை இனிய எளிய கவிதைகளில் பல வடிவங்களில் வழங்கியுள்ளார். அவ்வடிவங்களுள் குறிப்பிடத்தக்கது குறுங்காப்பியம். இவரது குறுங்காப்பியப் படைப்புகளுள் வரலாறு அடிப்படையில் ஒரு புதிய முயற்சியாக அமைந்துள்ளதுதான் 'பாண்டியன் பரிசு'. குறுங்காப்பியம் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பொதுவில் இலக்கியங்களை மொழிபெயர்பது என்பது அத்துணைச் சுலபமானதன்று. ஒரு படைப்பின் கருத்தை அதன் நடையிலேயே வெளிப்படுத்தும்போது அங்கே இலக்கியத்தின் சுவை கெட்டுவிடாமல் அதனைக் கையாள்வது என்பது சவால் மிக்க செயலே. இலக்கியப் படைப்புகளில் கவிஞர்களுடைய கற்பனைத் திறத்தை வெளிப்படுத்துபவை உவமை, உருவகம், படிமம், குறியீடு முதலிய உத்திகள் ஆகும். 'பாண்டியன் பரிசில்’ படிமம் என்னும் இலக்கிய உத்தி அமைந்துள்ள விதமும் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ள விதமும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.  இப்படைப்பின் மொழிபெயர்ப்பின் போது தோன்றிய பலவகை சிக்கல்களையும் மொழிபெயர்ப்பாளர் அவற்றைக் களைந்துள்ள விதமும் இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

குறிப்புச் சொற்கள்:

பாவேந்தர் பாரதிதாசன், பாண்டியன் பரிசு, மொழிபெயர்ப்பு, இலக்கியம், குறுநாவல்

Downloads

Download data is not yet available.

Author Biography

Umadevi Naidu Allaghery, Ms., Department of Tamil, Mahatma Gandhi Institute, Mauritious.

The author is a Lecturer in the Department of Tamil, Mahatma Gandhi Institute, Mauritious. 

Downloads

Published

2017-12-23

Issue

Section

Articles