திருவிசைப்பாவில் இறைவன் திருநாமச்சிறப்பு: ஓர் ஆய்வு
Divine Names Of Lord Civan In Tiruvicaippa
DOI:
https://doi.org/10.22452/JTP.vol6no1.5Abstract
Of the Twelve Saiva Tirumurais, the Tiruvicaippa is classified as the Ninth Tirumurai. This Tirumurai consists of 28 patikams with a total of 288 verses, which has been authored by nine devotees, from Tirumalikai Tevar to Cetirayar. Following the Saiva tradition of worshipping Civan, the paramount one without a name or form using various names and forms, the authors have pointed out copiously the aspect of His forms and appearance. Thus, it is possible to identify in this text, where the divine names of Lord Civan are mentioned. These names may be classified as special(cirappu) names, common(pothu) names and names of address(vili). It may be noted that these names depict the characteristics of the Lord in His natural(corupa) state and His general(tadatta) state. Hence, this research paper studies the divine names of the Lord in two sections such as the Names of the Natural(Corupa) State and those of the General(Tadatta) State.
Keywords:
Tiruvicaippa, Iraivan (Civan), Divine Names, Natural State, General State.
ஆய்வுச் சுருக்கம்
பன்னிரு சைவத்திருமுறைகளுள் திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையாக விளங்குகிறது. திருமாளிகைத்தேவர் தொடங்கி சேதிராயர் வரையிலான ஒன்பது திருமுறையாசிரியர்களால் இயற்றப்பட்ட இத்திருமுறையில் 28 பதிகங்களும் அவற்றுள் மொத்தம் 288 பாடல்களும் அடங்கியுள்ளன. சைவை நெறி வழிபாட்டின் அடிப்படையில் சிவப்பரம்பொருள் ஒரு நாமமும் ஓர் உருவும் அற்றவராயினும் அப்பரம்பொருளின் திருவுரு குறித்தும் திருநாமம் குறித்தும் ஒன்பதாம் திருமுறையின் ஆசிரியர்கள் குறிப்புகளை முன்வைத்துள்ளனர். இதில் சிவபெருமான் திருநாமங்களை அறிய வழியுண்டு. இத்திருநாமங்கள் சிறப்புத்திருநாமங்களாகவும் பொதுத்திருநாமங்களாகவும் விளித்தல்திருநாமங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளன. இத்திருநாமங்கள் இறைவனின் சொரூப மற்றும் தடத்த நிலை அடிப்படையில் அறியப்பட்டவை. ஆகவே தற்போதைய ஆய்வுக் கட்டுரை இறைவனின் சொரூப மற்றும் தடத்த நிலை குறித்த திருநாமங்களை விளக்குவதாக அமைகிறது.
குறிப்புச் சொற்கள்:
திருவிசைப்பா, இறைவன் (சிவன்), இறைத்திருநாமங்கள், சொரூப நிலை, தடத்த நிலை.