இந்திய சோதிட இலக்கியங்களும் சோதிடர்களும்
Literatures and Astrologers of Indian Astrology
DOI:
https://doi.org/10.22452/JTP.vol6no1.3Abstract
Astrology is one of the life skills and art in the indian civilization. Down the ages it has crossed many changes and developments. It is said that it was formulated by ancient saints. Astrologers made simple the astrological ideas in the form of poetry devised by experts many centuries ago and later these works have become books. Later these books were called Literature in Astrology. In the process of simplification no compromise was made regarding the content of the original texts. Because of this uncompromising native of the original text, indian astrology keeps its validity till date. The documentation of indian astrological works, paraphases and notes has been exemplery. The indian astrologers take thi credit.
Key Words:
Indian Astrology, Astrologers, Literatures, History, Tradition
ஆய்வுச் சுருக்கம்:
இந்திய நாகரிகத்தில் உருவான பல்வேறு வாழ்வியல் கலைகளுள் சோதிடக்கலை தனித்தன்மையுடையது. இக்கலை தோன்றிய காலந்தொடங்கி பல்வேறு காலக்கட்டங்களில் பல்வகை மாற்றங்களை ஏற்று வளர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. ஆதியில் சித்தர்களும் ஞானியர்களும் சோதிடக்கலையை உருவாக்கி வைத்ததாகக் கருதப்படுகின்றது. காலவோட்டத்தில் இந்திய சோதிட மரபில் பல சோதிட வல்லுநர்கள் தோன்றினர். ஆதியில் உருவாக்கப்பட்ட சோதிட விதிகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் வாழ்க்கை முறைக்கும் தேவைக்கும் ஏற்ப கடின நடையமைப்பைக் கொண்ட சோதிடச் செய்யுள்களை அவர்கள் எளிமைப்படுத்தினர். பின்னாளில் அவை நூல்களாக்கப்பட்டன ; சோதிட இலக்கியம் என அழைக்கப்பட்டன. ஆனால் இந்திய சோதிடத்தைப் பொருத்தவரை மூல நூல்களின் கடினநடை எளிமைப்படுத்தப்பட்டபோதும் மூல சோதிட விதிகளில் எத்தகைய பெரிய மாற்றங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. இதன்காரணமாகவே இந்திய சோதிடம் அதன் மூலத்தன்மையை இழக்காமல் இதுநாள்வரை வாழமுடிகின்றது. மேலும் வேறெந்த சோதிட மரபுக்கும் இல்லாதச் சிறப்பாக இந்திய சோதிடத்தில் மூல நூல்களும், வழி நூல்களும், விளக்க நூல்களும் முறையாக ஆவணப்படுத்துள்ளன. இதன்காரணமாகவே இந்திய சோதிடர்களால் இக்கலையை இயன்றவரை மரபுக்கெடாமல் வளர்க்கமுடிகின்றது. இவ்வாறாக மிகத்தொன்மைய கலையாக விளங்கும் சோதிடக்கலையை மூலம் கெடாமல் இன்றைய தலைமுறையும் கற்றுப் பயனுறும் வண்ணம் ஆக்கித்தந்த பெருமை சோதிட ஆசிரியர்களையே சேரும். இந்த ஆய்வு சோதிட ஆசிரியர்களையும் அவர்கள் உருவாக்கிய இலக்கியங்களாகிய சோதிட நூல்களையும் ஆராய்ந்து ஓர் அறிமுகத்தைத் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்புச் சொற்கள்:
இந்திய சோதிடம், சோதிடர்கள், இலக்கியம், வரலாறு, வழக்கம்