தமிழர் வரலாறு கூறும் தொல்லியல் தடயங்கள்
Archaeological evidence that explains the early history of Tamils
DOI:
https://doi.org/10.22452/JTP.vol7no1.5Abstract
This paper provides insight into several new sources for the history of the Tamil people. The people of Tamil Nadu are well known for their ability to create great literature, heroism, and charity. In the past the great Tamil kings crossed the vast sea, and conquered many land and brought glory to the motherland. Several archaeological evidence that explains the history of Tamil people have been found in and out of Tamil Nadu. In fact the early rulers have left many more archaeological evidence that could explain the early history of Tamils. A part of them haven found in and out of Tamil Nadu. As an addition to the available evidence, the author has found a number of artefacts (including inscriptions) during his field work. These artefacts are said to describe rare messages about early life of the Tamils.
Key words:
Inscription, archaeology, Tamil people, Nadukal, artefacts, Nattamedu.
ஆய்வுச்சுருக்கம்
தமிழ் மக்களின் வரலாறு கூறும் ஆவனங்களைப் பற்றிய ஒரு பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது. தமிழ் நாட்டு மக்கள் வீரம், இலக்கிய வளம், அறம் ஆகியவற்றுக்குப் பெயர் போனவர்கள். தொடக்க காலத் தமிழ் அரசர்கள் கடல் கடந்து பல நாடுகளை வென்று தாய்நாட்டுக்குப் பெருமையைச் சேர்த்தவனர். தமிழர் வரலாறு கூறும் தொல்லியல் சான்றுகள் பல தமிழ் நாட்டிலும் வெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உண்மையில் இம்மன்னர்கள் பல தொல்லியல் ஆதாரங்களை விட்டுச் சென்றுள்ளனர். அவற்றுள், தமிழகத்தின் நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடுகற்கள் மற்றும் பல்வேறு தொல்லியல் சின்னங்களும் அடங்கும். கள ஆய்வில் மூன்று நடுகற்கள் மற்ரும் கல்வெட்டுகள், முற்காலத்திய மற்பாண்டங்கள் போன்றவை கண்டறியப்பட்டன. இவை தமிழரின் பண்பாட்டினை வெளிப்படுத்தும் அசான்றுகளாகும். இது போன்று பல வரலாற்றுச் சான்றுகளை முறையாக ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டியது தமிழனின் கடமையாகும்.
குறிப்புச் சொற்கள்:
கல்வெட்டுகள், தொல்லியல் ஆய்வு, தமிழ் மக்கள், நடுகல், தொல்லியல் சின்னம், நத்தமேடு.